ஏழாம் அறிவு படம் மூலமாய் போதி தருமர் பற்றி தமிழ் உலகமே கண்டு கொண்டது. தமிழர்களுக்கு ஆறாம் அறிவு தாண்டி வேறு என்னவெல்லாம் இருந்தது..இருக்கிறது..இருக்கும் என்ற கோணத்தில் இப்போது யோசிக்க வேண்டியுள்ளது.
வடிவேலு காமெடி ஒன்று.. “ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்…யார் பேசுறது” என்று கேட்பார். பதிலுக்கு நான் சதுரச் செயலாளர் பேசுறேன் என்றும், வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும் போது சதுரத்துக்கு இருக்க மாட்டாரா என்று கேள்வி வேறு இருக்கும் அருமையான ரசிக்க வைக்கும் காமெடி அது.
ஒரு உன்மை மட்டும் மறுக்க முடியாது இதில். வட்டம் ஏதாவது வம்பு செய்தால் நாம் அனுக வேண்டிய இடம் மாவட்டம். மாவட்டம் ஏதும் வில்லங்கம் செய்தால் அவரை விட மேலிடத்தை நாம் அணுக வேண்டும் என்பது தான் அந்த காமெடி பீஸ் நமக்கு உணர்த்தும் 6ம் அறிவு.
நியூட்டனின் விதி தெரியுமா என்று யாரைக்கேட்டாலும் அந்த மூன்றாம் விதி தான் கூறுவர். இது தான் விதி போலும் என்று மற்ற விதிகள், விதி வலியது என்று சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்குமோ..??
முதல் விதியினை கொஞ்சம் பாருங்கள்.. நகரும் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும்… நகராப் பொருள் நகராதும் இருக்கும். எது வரை?? ஏதாவது ஓர் இடைஞ்சல் அதற்கு வராத வரை..
அதுவும் புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் அதையும் மீறி ஏதாவது பொருள் போக வேண்டுமா..என்ன செய்யணும்?? அதை விட மஹா சக்தி தேவை. இதைச் சொல்லத்தான் மாவட்டம் வட்டம் கதை எல்லாம் எடுத்தேன் முன்னாடியே..
கம்பராமாயணத்தில் ஒரு கட்டம் வருகிறது.. அனுமன் இலங்கையின் மதிற்சுவரை தாவி அதன் மேல் நிக்கிறார்..(மதில் மேல் பூனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மதில் மேல் குரங்கு) அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட மேல் உலகு வாழ் தேவர்கள், அனுமனுக்கு வாழ்த்து தெரிவிக்க மலர்கள் தூவினார்களாம்… அந்த மலர்களும் நேரே கொஞ்சம் இறங்கி வந்தனவாம்.. அப்புறம் அந்த இராவணனுக்கு கோபம் வந்துட்டா என்னா செய்றது என்று நெனைச்சி அப்படியே மேலே போயிடிச்சாம்..
கீழே விழுவது வேண்டுமானால் புவி ஈர்ப்பு விசையில் விழுவதாய் வத்துக் கொள்ளலாம்.. ஆனால் தேவர்களின் ஆசியையும் தாண்டி இராவணனின் எதிர் விசை செயல் படுகிறதாம்.. அதுவும் அந்த புவி ஈர்ப்பு விசையையும் தாண்டி… நட்சத்திரம் போல் அங்கேயே நின்னுடுதாம்…கம்பர் சொல்றார்..நானும் படிச்சதைச் சொல்றேன்.
இரண்டு விஷயங்கள் இங்கு தெளிவாகுது:
- நியூட்டனின் முதல் விதி நியூட்டனுக்கு முன்பே கம்பன் அறிந்திருக்க வேன்டும்.
- புவி ஈர்ப்பு சக்தி பற்றிய சேதியும் கம்பர் தெரிந்து வைத்திருக்கிறார்.
இதோ அதன் ஆதரவுப் பாடல்:
எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்.
கம்பனின் பார்வையில் என்னும் என்ன என்ன கிடைக்குமோ?? பாக்கலாம்..
சமத்து! ரொம்ப நல்ல சொல்கிறீர்! அச்சா ஹாய்!
-Gri
Thanks for the comments Giri.
சமத்து! ரொம்ப நல்ல சொல்கிறீர்! அச்சா ஹய்!