ஏழு முறை தோற்றவன் எட்டாவது முறை எழுவான்’ – இப்படி ஒரு தத்துவம் இருக்காம். (சமீபத்தில் அதைச் சொல்லி பிரபலம் ஆக்கியவர் சிம்பு அவர்கள். இன்னும் சில ஏழின் சிறப்புகள் பாக்கலாமா?
உலகில் 7 அதிசயங்கள்,
7 கடல்கள்,
வானவில்லின் 7 நிறங்கள்,
7 ஸ்வரங்கள்,
வாரத்தில் 7 நாட்கள்,
7 கண்டங்கள்,
7 கொடிய பாவங்கள்,
திருக்குறளில் 7 சீர்கள்,
கண்ணுக்கு புலப்படக்கூடிய கோள்ககளின் எண்ணிக்கை 7,
தாதுக்கள் எண்ணிக்கை 7,
இந்திய முக்கிய நதிகள்,
கடை ஏழு வள்ளல்கள்,
மனிதனின் கழுத்து எலும்புகள் 7,
முக எலும்புகள் 7,
தலையில் 7 துளைகள்,
கணுக்காலில் 7 எலும்புகள்
போதுமா இன்னும் வேண்டுமா?
இராமன் அம்புவிட்டு துளைத்த மரங்கள் 7
வேதாகமத்தில் 7 என்கிற எண் 735 தடவை வருதாம். (எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் செலவழித்து கண்டுபிடிச்சாகளோ?க. ஏழாவது, ஏழாம், ஏழு, ஏழு தடவை, ஏழு முறை இப்படி மொத்தமாக 860 இடங்களில் வேறு வருதாம்…
மலேசியாவில் மெர்டேகா, மெர்டேகா என ஏழுமுறை முழங்கினாராம். Tunku Abdul Rahman. சொன்ன நாள 31 August 1957. சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த புகைப்படத்தை மலேசியா அருங்காட்சியகத்தில். (ஏழு இடங்களில் வைக்கலை… ஒரே ஓர் இடத்தில் தான் வைத்திருந்தனர்.)

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி