மன்னைப் போக்கி


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 6

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*மன்னைப் போக்கி* இங்கு மன் என்பது தலைவனான இராமனைக் குறிக்கப் பயன் படும் சொல்லாக கம்பன் கூறுகிறார். மன்னன் என்பதின் சுருக்கமாய் இருக்குமோ?

இதே பாடலில் இலக்குவனை, என் மஞ்சனை என்றதும்;

இராவணனை நஞ்சு அனையான் என்றதும் சிறப்பாய் கவனிக்க வேண்டியவை.

Ctrl + C

Ctrl + V

அதாவது காப்பி பேஸ்ட் செய்யும் நவீன தொழில் நுட்பம் தேவையே இல்லாத கம்பன் முன், பல வார்த்தைகளைத் தமிழ்த்தாய் கொண்டுவந்து நீட்டுகிறாள். அதை வைத்து கம்பன் விளையாடுவதும் நம் தமிழுக்குக் கிடைத்த சொத்து தானே!

இதோ முழுப் பாடல்:

‘வஞ்சனைமானின் பின் *மன்னைப் போக்கி*, என்

மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ?

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி விடம் போன்ற இராவணனின் வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

நஞ்சு அனையான்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 5*

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

நஞ்சு அனையான்

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான் –

என்று சீதை சொல்வதாய் சொல்கிறது கம்பன் வரிகள்.

சோகத்தில் சீதை புலம்பும் இடத்தில் கம்பன் இட்ட வரிகள் இவை. *விடம் போன்றவன்* என்று இராவணனை குறிக்கப் பயன்படுத்திய உத்தி.

தனியே புலம்பும் போது பயன் படுத்துவது என்ன வீரம் இருக்கிறது? இதே வார்த்தையினை திரிசடையிடமே சொல்வதாயும் கம்பன் வீரமாய் படைத்தமை தான் கம்பனின் சிறப்பு.

இதோ அந்த இரு பாடல்களையும் முழுதும் பார்க்கலாம்:

‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, என்

மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ? [5351]

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி *விடம் போன்ற இராவணனின்* வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

திரிசடையிடம் சொன்ன கம்பன் வரிகள் இதோ:

*’நஞ்சு அனையான்*, வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?’என்றாள். [5103]

பயப்படாதே என்று கருணை காட்டுபவளே! *விடம் போன்ற இராவணன்* காட்டிலே வஞ்சகத்தைப் புரிய எண்ணி (பஞ்சவடியை) அடைந்த அன்று வலப்புற அங்கங்கள் துடித்தன ; (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும் இப்போது குறைவில்லாதன இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும் என்னை வந்து அடையும் நன்மை யாது? என்று கூறினாள்.

[5103சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

என் மஞ்சனை


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 4

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*என் மஞ்சனை*

வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, *என்*

*மஞ்சனை* வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா. என்பதாய் செல்கிறது கம்பன் வரிகள்.

நாலு வார்த்தை திட்டும் உரிமை அம்மாவுக்குத்தானே உண்டு. *தன் மகனாக இலக்குவனை* நினைத்து திட்டியதை, சீதை அம்மா பின்னர் உணர்கிறார். *என் மஞ்சனை – என் மகனை* எனப் பாசத்தோடு இலக்குவனை சீதையார் சுட்டும் கம்ப பாச வரிகள் அவை.

இதோ முழுப் பாடல்.

‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, *என்*

*மஞ்சனை* வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ?

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி விடம் போன்ற இராவணனின் வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

நாளையும் பார்ப்போம்.

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 3

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்*

என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;

– இப்படி, கவலையில் இருக்கும் சீதையைக் குறிப்பிடுகிறார் கம்பர். இடை இருக்கிறதா? இல்லையா?என்பது தெரியவில்லை. மின்னல் போல் இருக்கிறதாம்! ஆனால் இடை இருப்பதை ஒரு ஆபரணம் கொண்டுதான் கண்டுபிடிக்க இயல்கிறதாம்! இது கம்பர் கற்பனை.

பெயர் சொல்லாமல், பெயருக்குரியவர் எப்படி இருந்தார் என்பதை சொல்லிட நாம் கம்பனிடம் தான் கற்க வேண்டும்.

என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;*

‘ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்

பொன்றும்பொழுதே, புகழ் பூணும்’ எனா,

மின்னலை ஒத்திருக்கும் இடையையும் விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி என்று பலவாறு நினைந்து பெருமூச்சுவிட்டு வருத்தம் அடைவாளாகிய பிராட்டி, உறுதிபெற்று என்னுடன் ஒன்றுபட்டுள்ள என் உயிர் இருந்தது என்றால் துன்பம் உள்ளதாகும் நான் இறக்கும் சமயத்தில்தான் புகழ் என்னைச் சேரும் என்று கருதி.

[5344 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

தொண்டை வாய்மயில்


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 2

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

தொண்டை வாய்மயில்

தொண்டைவாய் மயிலினைத் தொழுது,தோன்றினான் என்பது கம்பன் வரிகள்.

கோவைக் கனி போலும் வாயினை உடைய மயில் போன்ற…. எனச் சொல்லும் போதே சீதையினைத் தான் கம்பன் சொல்கிறார் என்ற உங்கள் ஊகம் சரியே தான்.

சோகத்தில் இருக்கும் சீதை கூட, அனுமன் பார்வையில் எப்படி இருந்தார் என்பதை நம் கண் முன் நிறுத்திய வரிகள் அவை.

ஒரே பாடலில் இராமனையும், சீதையினையும் பெயர் கூறாமல் அவர்களின் குனங்களால் குறிப்பிட்டமைதான் கம்பனின் சிறப்புக்குணம்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலி னைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

அண்டர் நாயகன்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 1*

கம்பன் தனது 10000 பாடல்களில் கம்பராமாயண காப்பியம் படைத்துள்ளார். ஒரு சில கதைப் பாத்திரங்களையே அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டிய சூழல். கம்பன் அச்சிக்கலை எளிதாக கையாள்கிறார். பெயரினை அடிக்கடி குறிப்பிடாமல், மறைத்து அவர்களின் குணங்கள் அல்லது பொருள்கள் பற்றி சொல்லவிழைகிறான்.

மறைந்திருந்து காட்டிய கம்பன் பெயர்களை, கொஞ்சம் நாமும் தினமும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

இன்று….

*அண்டர் நாயகன்* அருள் தூதன் யான்’ என்பது கம்பன் வரிகள். அண்டர் நாயகன் அருள் பெற்ற தூதன் யான் என்று சீதையிடம் அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் இடம் இது.

அண்டர் நாயகன் என்றால் தேவர்களின் தலைவன்.

இராமனைத்தான் இப்படி கம்பன் சொல்கிறார்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*