அந்தக் காலம் ஆரம்பித்து, இந்தக் காலம் வரை ரீ மிக்ஸில் ஆட்டம் போட வைக்கும் அருமையான குத்துப் பாடல் இந்த “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா?”
ஆத்தாவை ஆத்தோரமாய் அழைப்பது வாடிக்கை தான். ஆனால் இதில் இந்த “ஏ” எங்கிருந்து வந்தது??
ஏய் என்று அருகிலிருக்கும் உரிமையுள்ள மகளிரை தனிமையில் அழைக்கலாம். யாராவது கூட இருக்கும் போது அழைத்தால் வம்பில் வந்து முடியும்..
தமிழ் சினிமாக்களில் வில்லனும் கதாநாயகனும் ஏய் என்று உச்சமாய் கூப்பிட்டால்
தான் வணக்கம் போட முடியும் என்று தோன்றும் அளவுக்கு இந்த ஏய் மிகப் பிரபலம்.
ஏ புள்ளெ கருப்பாயீ…உள்ளே வந்து படுதாயீ என்று கிராமத்து காதலியை வைத்து
வந்த பாடலும் ஹிட் தான்.
ஆக மொத்தமாய் ஏ என்பது ராஜேந்திரகுமார் ங்கே என்று சொன்னமாதிரி தான் படுது.
ஹிந்தியில் சட்டுன்னு போய்ட்டு வந்திடரேன்னு சொல்றதுக்கு யூ கியா யூ ஆயா
என்பார்கள்…
சமீபத்தில் கம்பரின் வலைப் பக்கம் போனேன். (ஏன் அவர் மட்டும் பிளாக் போட மாட்டாரா என்ன??) அவர் என்ன ஏ க்கு சொல்றார்ன்னு பாத்தேன்..
பாத்ததை உங்களுக்கு சொல்லலைன்னா தலை வெடிச்சிடாது??
அவர் பாக்கிற களம் வித்தியாசமானது.
ராம சகோதரர்களுடன் மோதி ஏகமாய் மூக்கு முழி எல்லாம் டேமேஜ் ஆகி 108 உதவி இல்லாம இலங்க்கைக்குத் திரும்பினாள் சூர்ப்பனகை. நகை போட மூக்கும்
இல்லை பாவம்.
அப்பொ கோபத்தில் ராவணன் பணியாளர்களை அழைக்கிறார்..
ஏ
அப்பொ அந்த ஏ வருது..
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும்
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது என்று கேக்கிற மாதிரி..சட்டுன்னு பணி ஆட்கள்
வந்தாங்களாம்.
அப்பொ அப்படி வரும் ஆட்களை மட்டும் ஏ ன்னு கூப்பிடலாமா??
யாரையுமே கூப்பிட முடியாதா??
அது உங்க சாமர்த்தியம்…
மீன்டும் சந்திக்கலாம்.