சேரன்

’ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!’ என்றவுடன் அனைவரின் ஞாபகத்திற்கும் வரும் நபர், நடிகரும் இயக்குனருமான சேரன் அவர்கள்.
வடக்கு அந்தமான் தீவின் ’டிக்லிபூர் தமிழர் சங்க விழா’வினை ஒட்டி அவர் குடும்பத்தோடு வந்திருந்தார். போர்ட் பிளேயரிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தோம்.
போகும் வழியில் சில ரசிகர்கள் சேரனை அடையாளம் கண்டு, ஆட்டோகிராப் (அவர்கிட்டேயேவா!!) வாங்க வந்தனர். கையில் பேப்பர், புக் ஏதும் இல்லாததால், பர்ஸிலிருந்து ரூபா நோட்டை எடுத்து, அதில் கையெழுத்து இட்டுத் தரும்படி கேட்டனர். ’ரூபா நோட்டிலெ கையெழுத்து போட எனக்கு பவர் இல்லையே!!’ என்று மென்மையாய் மறுத்தார்.
பயணம் தொடர்ந்தது.
டிக்லிபூர் தமிழர் சங்க விழா மேடையில் சேரனுக்கு, சிம்மாசனம் போன்ற பெரிய நாற்காலியும், மற்றவர்களுக்கு சாதாரண நாற்காலியும் போட்டிருந்தார்கள். அதைப்பார்த்ததும், ”எல்லாருக்கும் ஒரே மாதிரியான நாற்காலி போடுங்கள்” எனச் சொல்லி, அப்படிப் போட்ட பின் தான் மேடையே ஏறினார்.
சினிமா, பந்தா, இமேஜ், என்று ஒரு கனவில் வாழும் திரைப்பட பிரமுகர்களுக்கு மத்தியில் இவரின் எளிமையான செயல் வியப்பாகத்தான் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி Dr. வா செ குழந்தைசாமி