என்ன இது வள்ளுவர் பின்னாடி MAB ன்னு பாக்கிறீங்களா???
அவர் தான் Master of All Branches (MAB) ஆச்சே !!!
சரி மேட்டருக்கு வருவோம்..
இரண்டு நாளுக்கு முன் டிவியில் வந்த செய்தி இது.
எங்களிடம் முதலீடு செய்யுங்கள்… ஆறு மாதத்தில் நான்கு மடங்காக தருகிறோம்..என்று ஒரு நிதி நிறுவனம் சொல்லி இருக்கிறது.. இதையும் நம்பி பலர் பணம் இழந்துள்ளனர்…
நம்ம நிதி ஆலோசகர் திருவாளர் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பாக்கலாமா??
அறிவு இல்லாத ஆட்கள் தான் இப்படிப்பட்ட முதலீடுகள் செய்வார்களாம்…
பின்னால் வரக்கூடிய பணம் மட்டுமே பாத்து கையில் உள்ளதை கோட்டை விட்டுறக்கூடாது.. அப்படி உட்டா…உனக்கு அறிவே இல்லேன்னு அர்த்தம்…
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறி வுடையார்.
பொண்டாட்டி சொல்லியும் கேக்காத ஆட்கள்…. வள்ளுவர் சொல்லியா கேக்கப் போறாக????
புருஷன் சொல்றதை கேட்காத பெண்டாட்டி தான் ரஹஸ்யமாக யாருக்கும் தெரியாமல் முதலீடு செய்து விட்டு, பின் அதை இழந்ததையும் யாருக்கும் சொல்லாமல் இருக்கும் உன்னத ஸ்த்ரீக்கள் !
இந்த ஆங்கிலும் நல்லா இருக்கே !!!