கொல்கத்தாவில் பரமக்குடி


அங்ககும் அவருக்கும் உடுத்தத் துணி இல்லை.சொர்க்கமே வந்தாலும்…அது நம்மூர்ப் போலாகுமா??? என்று காளைராஜன்..சே..சே.. மாட்டுராஜன்…இல்லை… இல்லை… ராமராஜன் ஒரு படத்தில் அனுபவிச்சிப் பாடுவார்..

இளையராஜாவின் இசை அதில் இன்னும் ஒரு சுகத்தினைச் சேர்க்கும்..

சொந்த ஊர் அவ்வளவு ஒசத்தியா??

பின்னிப் பெடலெடுக்கும் வெயில்… எப்போதும் தண்ணி பிரச்சினை இருக்கும் . பன்றிக்குடியா ? என்று கேக்க வைக்கும் பரமக்குடி, எனக்கு சொந்த ஊர் என்பதால்… எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது.. (இப்போதெல்லாம் அந்த தண்ணிக்கு தட்டுப்பாடே இல்லை )

சரீ… விஷயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் கொல்கத்தா வழியாய் தில்லி சென்று வந்த போது ,எனது அலுவலக ஊழியர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அங்கே விடுப்பில் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வாங்கன்னு பிரியமாய் அழைப்பு விடுத்தார்… சரி தஷ்னேஸ்வர் தரிசனம் முடித்து கிளம்பினேன்.

போகும் இடம் தனியாகாரி என்ற ஊர். கொல்கத்தாவில் இருந்து 50 கிமீ தள்ளி இருந்தது.

சென்னை மதுரை தில்லி போன்ற நகரங்கள் சுத்தி வரும் போது அஸ்திவார விதை நட்ட கான்கிரீட் மரங்கள் தான் அதிகம் தெரிந்து அலுப்பு தட்டும். அதற்க்கு முற்றிலும்
விதி விலக்காக எங்கு பாத்தாலும் வயல் வெளிகள்.. (டாடாவின் நானோ தொழிலகம் உள்பட)

ஊரெல்லாம் மனை ஆயிட்டா நாம சாப்பாட்டுக்கு என்ன செய்வதுன்னு கேள்வி இது வரை இருந்த்து.. வழி நெடுக உருளைக்கிழங்கு சாகுபடி பாத்து அந்த பயம் போயே போச்சு..

ஊர் போனால்..ஏதோ ரொம்ப பழகிய இடம் போல்.. தெருக்களும் சரி … மக்களும் சரி… மனதில் ஓர் இனம் புரியாத இறுக்கம்..

கொஞச தூரம் போனால் சடக் புடக் என்கிற பழக்கமான தொடர் சத்தங்கள்..

என்ன அந்தச் சத்தம்? என்று கேட்டேன்.

நெசவு நெய்பவர்கள் இருக்கும் பகுதி என்ற பதில் வந்தது.

அட … நம்மூர் மாதிரி தானா.. என்று ஒரு வீட்டை எட்டி பாக்கலாம் என்றேன்.

கொல்கத்தா நெசவாளி வீட்டில் வாசலுக்கு முன் இரண்டடி உயர சுவர் இருந்தது. தாண்டி வாங்கன்னு வங்கக் குரல் உள்ளிருந்து வந்தது.

உள்ளே போனால்… அந்த ஊர் நெசவாளியும் இளைத்தே இருந்தார். ஊர் மானம் காக்க சேலை நெய்கிறார்.. அவர் மேல் ஒரு துண்டு கூட இல்லை.

பொதுவா விவசாயியும் நெசவாளியும் பக்கம் பக்கமா இருந்து தொழில் செய்ய முடியாது.

விவசாயிக்கு மழை வேணும்.. மழை வந்தா சிரமம் நெசவு வேலைக்கு.

ஆடு மாடு கோழி இவை விவசாயிக்கு தொழில் சார்ந்தது.. இவைகள் எல்லாம் நெசவு தொழிலுக்கு தொந்திரவு தருபவை.

அறுவடை காலம் விவசாயிக்கு கொண்டாட்டம். எலி பூச்சி தொந்திரவு காரணமாய் நெசவாளிக்கு திண்டாட்டம்.

இத்தனையும் மீறி வயல் வெளிக்கு பக்கமாய் சேலை தயாரிக்கும் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி வரும் போது வருமானம் பத்தி கேட்டேன்..

குடும்பமே உழைத்தால் மூன்று நாளுக்கு 75 ரூபாய் வருது என்று அவரும் பஞ்சப் பாட்டு பாடினார்..

எப்படியாவது என் பசங்களை படிக்க வச்சி ஒரு வேலைக்குப் போயிட்டா… இந்த தொழிலுக்கு ஒரு முழுக்கு போட்டுறலாம் என்றார்…

அப்படியே என் அப்பா சொன்ன வார்த்தைகள்.. அவர் சொன்னார்… செய்தார்.

இவர் சொல்கிறார்… பையன் ஒத்துழைப்பானா??? இவர் கனவு பலிக்குமா???

கனத்த நெஞ்சுடன் திரும்பினேன்.. கொல்கத்தாவிலும் பரமக்குடியை தரிசித்த திருப்தியில்…

4 thoughts on “கொல்கத்தாவில் பரமக்குடி

  1. எங்கெல்லாம் நெசவுத்தொழில் இருக்கிறதோ அங்கெல்லாம் உங்கள்
    கணக்கு பிரகாரம் ‘பரமக்குடி’ உண்டு !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s