என்னெயெ ரொம்ப நல்லவன்னு…


“எவ்வளவு தான் அடிச்சாலும் நீ வாங்கிக்கிறயே.. என்னையெ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க”- இது ரொம்ப பாப்புலரான வடிவேலுவின் டயலாக்.

பாக்கப்போனா.. யார் நல்லவன்? இப்படி ரொம்ப அடி வாங்குற ஆளு நல்ல ஆளா??

சமீப காலமா வரும் படங்களிலெ நல்லவனெ விட கெட்டவன் தான் அதிகம் வருகிறான்.  “கெட்டவன்” என்று பெயர் வைத்தேயும் காட்டி விட்டார்கள்.

“நல்லவன்.. எனக்கு நானே நல்லவன்.. சொல்லிலும் செயலிலும் நல்லவன்..” என்று ஒரு பழைய பாட்டு. சொல்லும் செயலும் ஒன்னா இருக்கனும்னு சொல்லுது.

ஆனா கார்பரேட் தத்துவம் ஏழே நாலில் சிகப்பழகுக்கு கியாரன்டி தருகிறது. நான் கேக்கிறேன்… இது மட்டும் உண்மைன்னா, உலகத்திலெ கருப்பர்கள் ஒரு வாரத்தில் காலி ஆயிருக்க மாட்டாங்க்க?? இன வேறு பாடு ஒழிக்க ஒரு வாரம் போதுமே.. ஆனா.. சின்னதா ஒரு ஸ்டார் போட்டு conditions apply இருக்கும். நல்ல வியாபார தத்துவங்கள்..

நம்மால் நல்லவர்களாக ஆக முடியுமா?? ம்ஹும்… நம்மளை திருத்த முடியாது.. “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம்ம நாடே இருக்குது தம்பி”…என்றதும், கலாம் ஐய்யா தனது அஸ்திரத்தை இளைஞர்களை நோக்கி செலுத்தியதும் தான் இன்று, ஹஜாரே போன்றவர்களின் பின்னால் ஹஜாரேங் லோக் (ஆயிரக்கணக்கான மக்கள்) போகிறார்கள்.

இது இருக்கட்டும்… இராமன் நல்லவனா??

இது என்ன கேள்வி?? அவதார புருஷன் நல்லவனா இல்லாமெ எப்படி இருக்க முடியும்?

ஆபீசில் உயர் அதிகாரிகள் பத்தி இப்படித்தான் பேசுவார்கள்.. அந்தாளுக்கு இந்தாளு பரவாயில்லை. தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு பரவாயில்லை… இப்படி..

கம்பரும் இராமன் நல்லவன்னு சொல்றதுக்கு இந்த மாதிரி கம்ப்பேர் செய்து சொல்றார்.. பாருங்க..

புகழ் எல்லாருகும் இருக்கு.. பில்கேட்ஸுக்கும் இருக்கு. பின் லேடனுக்கும் இருக்கு. ஆனா பொருத்தமான புகழ்
இருக்கனுமாம்.

அது யார் கிட்டெ இருக்காம்?? சீதை கிட்டெ இருக்காம்.

அந்த சீதை நிலமகளை விட நல்லவளாம். அதோட போச்சா.. இன்னும் ஊர்லெ இருக்கிற எத்தனை மகள்கள்?-ன்னு ஒரு லிஸ்ட் எடுக்கிறார் கம்பன்.

திருமகள் ; கலைமகள்; (கலைமானை வாகனமா வச்சிருக்கிற) மலைமகள் இந்த மூனு மகள்கள் கெடைக்கிறாங்க.

அடுத்த பிட்டைப் போட்றார்.  சீதை அந்த மூனு பேத்தைக் காட்டிலும் நல்லவள்…

ம்… அப்புறம்…

இவ்வளவு நல்லவளான சீதையின் கண்களைவிட நல்லவன் இராமன்.. (அப்புடிப் போடு அறுவாளை).

நாம தான் யாரையாவது கலாய்க்கும் போது, அநியாயத்துக்கு நல்லவானா இருக்கானேன்னு கேப்போம்..  இராமன் அந்த ரகமோ??

கம்பனுக்கு சொல்லி முடியலை..

இன்னும் சொல்றார். இப்படி நல்லவனா  இருக்கிறதினாலே யார் யாரெல்லாம் எப்படி எப்படி எல்லாம் விரும்புறாங்க தெரியுமா??

யார் யார்: படிச்சவங்களும் படிக்காதவங்களும் விரும்புறாங்க்க..
எப்படி எப்படி: சாப்புடற தண்ணி மாதிரியும் (எந்தத் தண்ணி?- நல்ல தண்ணி தான்..),
பாதுகாப்பான உசுரு மாதிரியும்

நாமளும் நல்லவனா இருந்தா அந்த பாக்கியம் கெடைக்கும்..

இந்த பிட்டு சாரி பாட்டு ரொம்ப சிம்பிளான பாட்டு மாதிரி தெரியுது… (ஓரளவு கம்பர் பிடிபட ஆரம்பிச்சிட்டாரோ?)

மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலைஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சானகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயி….

நானு அவ்வளவு நல்லவன் இல்லையோ…பாட்டு கூட முழசா கிடைக்கலை..

நீங்க நல்லவங்க தானே… தேடுங்க..

நான் வேறு ஏதாவது தேடறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s