[முன் குறிப்பு: இந்த போஸ்டிங்கில் கம்பர் வர மாட்டார்…நீங்க தைரியமா படிக்கலாம்]
இந்தக் காலத்தில் ஒரு சின்ன வீடு வாங்குவது என்பது எவ்வளவு சிரமமான காரியம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அதை விட சிரமமான ஒரு காரியம், இந்த சின்ன வீடு என்பதை வெளியே சொல்லி விடவும் முடியாது… அந்த அளவுக்கு “சின்ன வீடு” என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் கரெக்டா தப்பா புரிஞ்ச்சி வைச்சுருக்கு…
என் வீட்டுக்காரி என் லேப்டாப்புக்கு வச்சிருக்கும் பெயர் என் சின்ன வீடு..
காரணம்…???
சின்னதா..அழகா..கலர்ஃபுல்லா…இருக்கு
அடிக்கடி செலவுவைக்கும்…
அடிக்கடி அழைக்கும்.
இரவும் பகலும் எப்போதும் அதிகமாய் நான் தொடுவதும் அதைத்தான் என்று போட்டுக் கொடுத்தேன்… [கரண்டி அடியை குனிந்து தப்பித்தேன்..]
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும் என்று இப்போதைக்கு சொல்லும் வசனத்தை அந்த காலத்திலும் கையாண்ட சில நிகழ்வுகள் பாக்கலாம்..
நெனைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது என்பாங்க… அது எப்படி??
கொஞ்சம் கம்பனை கொண்டு வராமல் ராமாயண காட்சிக்கு போவோம்.. (கம்பருக்குத் தெரியாமல்)
இந்திரன் மாற்றான் தோட்டத்து மல்லிகையான அகலிகையை அடைய நினைத்தான். அவளின் கணவனான முனிவனின் வடிவில். அவளுக்கு ஆரம்பத்தில் விவரம் தெரியவில்லை…ஆனால் இந்திரன் ஹேண்டில் செய்த விதம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க…அந்த ஒரு கணத்தில் ..இருக்கட்டும்…என்று நினைத்த அந்த நெனைப்பு தான் அவளை கல்லாக்கி பொழைப்பைக் கெடுத்து விட்டது..
இதே மாதிரி ஒரே ஒரு வார்த்தை ஒரு மனுஷனையே மாத்தின கதையும் இருக்கு…
சவாலே சமாளின்னு ஒரு படம். அதில் TMS உணர்ச்சி பூரவமா பாடும் பாட்டு வரும். நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே…என்று தொடங்கும் பாட்டு. அதில் அவர் ஹை பிட்சில் பாடும் வரி…
“சொன்ன வார்த்தையும் இரவல் தானது…
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது”
அப்பொவே அந்தக் கேள்வி வந்தது..
யாரு அந்த Mr நீலகண்டர்???
நல்ல சிவ பக்தர்.. சிவ பக்தர்களில் யாராவது வந்து, உங்க மொபைல், லேப்டாப் இப்படி எது வேணும் என்றாலும் இல்லை என்று சொல்லாமல் தருவார். தேவை என்றால் செல்லுக்கு அவர் டாபப் செய்தும் தருவார்…
ஆனா Mr நீலகண்டருக்கு சொஞ்சம் சபல புத்தி… பலான பார்ட்டிகளோட பழக்கம் உண்டு வீட்டுக்கு தெரியாமே… (அப்போ… இதெல்லாம் வீட்லே சொல்லிட்டா இருப்பாங்க??).
Mrs நீலகண்டருக்கு அந்த சங்கதி ஒரு நாள் தெரிஞ்சி அந்தம்மா, “நம்மளை தொட்டே நீ கண்டமாயிடுவே” என்று சிவன் மேல் ஆணையிட்டு சொல்லிட்டாங்க…
Mr நீலகண்டர் கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ள பார்ட்டி… என்னைத் தொடாதேன்னு சொல்லாமே…
நம்மளைன்னு சொல்லிட்டாகளே…!!!
இனி எந்த மாதரையும் தொடக்கூடாதுன்னு இருந்திட்டாராம்..including wife & palaana parties.
கதை இப்படி போகுது..
இப்படியே போனா..இயற்பகை நாயனார் கிடைச்சார்… ஒரு அடியார், மனைவி வேணும்னு சொல்ல குடுத்தாராம்… அதோடு கிளைமாக்ஸில் நம்ம சினிமாவில் வரும் கத்தி கம்பு ஆகியவைகளையும் சமாளித்து அனுப்பி வச்சாராம்..
இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? – ன்னு வடிவேல் ஸ்டைலில் கேட்டா…
Let us stop watching Tv… Can we Try???