Why dis kolaveri in Andaman?


சமீபத்திய ஊடகங்கள் எல்லாமே இந்த கொலைவெறி பற்றி எழுதி வைக்க, நான் மட்டும் அதை எப்படி விட்டு வைக்க முடியும்??

மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத அந்தக் காலகட்டங்களில் கூட இந்த மாதிரி செம ஹிட் பாடல்கள் பட்டி தொட்டிகள் எல்லாம் முனுமுனுக்கப் பட்ட பாடல்களும் உண்டு.

எழங்தப்பயம்..எழந்தப் பயம்…
சித்தாடை கட்டிகிட்டு
என்னடி ராக்கம்மா
மச்சானைப் பாத்தீங்களா??
ஆத்தா ஆத்தோரமா வாரியா
அடியேய்..மனம் நில்லுன்னா நிக்காதடி
ஓரம் போ..ஓரம் போ

 இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்… ஆனால் அதற்கும் இந்த கொலைவெறிக்கும் சின்ன …ஏன்…பெற்ற்றிய்ய்ய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பாய் ஹிட் ஆன பாடல்களான,  சல சல சாரக்காத்து, ஜில்லா விட்டு ஜில்லா வந்த போன்ற பாடல்களும் தமிழ் சேனல்களில் அடிக்கடி போட்டு வருவார்கள். இந்த கொலைவெறி பாட்டு மட்டும் தமிழ் சேனல்களில் மூச்ச்சே விடுவதில்லை.. ஆனால் V Channel, Times Now, Zoom, Soni Mix போன்ற சேனல்களில் மூச்சுக்கு முன்னூறு தரம் போடுகிறார்கள்.. ஒரு வேளை ஆங்கிலப்பாடல் என்று  அவர்கள் நினைத்திருப்பார்களோ..??

 வந்த சில வாரங்களில் சீனா, ஜப்பான் போன்ற மொழிகளிலும் பாட்டு மாறிவிட …இந்தியாவின் அனைத்து மாநில பாஷைகளிலும் மொழி மாற்றம் ஆகிவிட… சௌராஷ்ட்ராவில் கூட பாட்டு வந்து விட்டதாம். இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் தமிழிலும் அந்தப் பாட்டு மொழிபெயர்த்துள்ளது தான்.

இன்னும் YOU Tube award, IIM ல் பாடம் என்று தினமும் ஏறி வரும் அதன் புகழ் இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தமிழில் சாடித் தீர்க்க… அதுவும் பாக்காத ஆட்களை பாக்க வைக்குது..

 அந்தமானில் தனியார் கேபிள் டிவியில் ஹிந்தி சேனல் ஒன்றில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கொலை வெறி பாடல் வருதாம். (ஏதோ மந்திரிச்சி விட்ட மாதிரி இல்லெ இருக்கு இது)

பாடல் கெடக்கட்டும்…சில வருடங்களுக்கு முன்னர் சுனாமி வந்து கொலைவெறி ஆட்டம் ஆடி விட்டுப் போனது. இப்போது சமீப காலமாய் மனிதர்கள் கொலைவெறி ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் தோழனை சதக் சதக் என்று வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. (தோள் கொடுப்பான் தோழன் என்பதை தப்பா புரிஞ்ச்சி கிட்டானோ??)

அது போகட்டும்… சிவில் இஞ்சினியரிங்க் படிக்க சென்னை போனவன் கொலைவெறி போட்ட தகவல் பேப்பரில் பாக்க…கொலைவெறி பாட்டே ரசிக்க முடியாது போகிறது…

 வழக்கமா…கம்பராமாயணம் இல்லாம முடியாது… ஏன் எந்தக் கொலைவெறி என்று கேக்கிற மாதிரி கம்பர் ஏதும் எழுதலையா?? அதெப்படி இல்லாமெ இருக்கும்??.. இதோ…கம்பரின் வரிகள்…

 ஒருத்தர் நடந்து வந்தா பாதச் சுவடு தெரியும்.. ஆனா இந்த ஆளு நடந்தா..பூமியே சும்மா அதிருதில்லெ என்று சொல்ற மாதிரி இருக்குதாம்..சும்மாவே அதிருதாம்..அப்படியே அமுங்கியும் போகுதாம்.. உலகதைத் தாங்கும் அந்த ஆதிசேஷனே கொஞ்சம் வெலெவெலெத்துப் போகிறாராம்.. நாடு சுத்தி இருக்கும் கடல் இவரு கால் வைக்க அதில் அவரும் அலை கரையையும் தாண்ண்ண்ண்ண்டிப் போகுதாம்.. அம்மாடி..அதோடு போச்சா?? கடலையே ஆடையா போட்ட அந்த நிலமகள் முதுகு சுளுக்கிக்கொள்ள.. வாய் விட்டு கதறினாளாம்… ஆமா… இதெல்லாம் யாருக்கான சாங்க் பாஸ் என்று கம்பர்கிட்டே கேட்டேன்.

 ராவணன் அசோக வனத்தில் வரும் போது அனுமன் பாத்து பாடின கொலைவெறி சாங்க் இது என்கிறார்..

 பாட்டு பாக்கணுமா?? இதோ.. நீங்களே டியூன் போட்டு பாடிக்கிங்க..

ஆர்கலி அகழி அருவரை இலங்கை
அடிபெயர்த்து இடுதொறும் அழுந்த

நேர்தரும் பறவைப் பிறழ் திரை தவழ்ந்து
நெடுந் தடந் திசைதொறும் நிமிர

சார்தரும் கடுவின் எயிறுடைப் பகுவாய்
அனந்தனும் தலை தடுமாற

மூரி நீர் ஆடை இரு நில மடந்தை
முதுகு உளுக்குற்றனள் முரல.

 என்ன.. இதைப் படிக்கிறப்பொ நாக்கே சுளுக்கிக்கும் என்று யோசிக்கீகளா???

 பயமுறுத்தல்கள் இன்னும் தொடரும்…