முதலில் இதைச் சொல்லியே ஆரம்பிக்கிறேன். எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரம்.
இருந்தாலும் உலகமே கிரிக்கெட் மேல் விழுந்து கிடக்கும் போது நானும் அதைப் பத்தி ஏதும் எழுதலைன்னா.. தமிழ்ச்சாதி அதை மன்னிக்குமா??
இந்த ரன் அவுட் சொல்லும் வாழ்வியல் தத்துவம் என்ன தெரியுமா? ஓட வேண்டிய நேரத்தில் ஓடாமல் ஓடக்கூடாத நேரத்தில் ஓடி அடுத்தவனை… அதுவும் அதே அணியைச் சேர்ந்த பார்ட்னரை அவுட் ஆக்கும் பரிதாபம்….
வாழ்க்கையிலும் இப்படி நிறைய நண்பர்கள், இப்படி உங்களிடம் நடந்து கொண்டிருக்கலாம்…
இப்படியெல்லாம் இப்பத்தான் நடக்குதா??
கொஞ்சம் கால வண்டியை ரிவர்ஸ் கியர் பொட்டு ரொம்ம தூரம் தள்ளி நின்னு வேடிக்கை பாப்போம் … என்ன நடக்குதுன்னு???
யாரோ சீரியஸா என்னமோ சொல்லிகிட்டு இருக்காங்க… நம்ம தமிழர் பண்பாடே இப்படி ஏதும் கூட்டம் நடக்கிற இடத்திலே போய் வெடிக்கை பாக்கிறது தானே!!
நாலடியார்: தம்பீ…
சொலுங்கண்ணா…
ஒரு கார்யம் யாராலெயும் செய்ய முடியாதுன்னு இருக்கு. அதை ஒருத்தன் செய்றேன்னு நிக்கிறான். ஆனா ரொம்ப ஈசியா செய்ய முடிகிற வேலையை செய்யாம டபாய்க்கிறான்..இப்படி உருப்புடாத ஆட்களை என்ன செய்யலாம்??
ரன் அவுட் ஆக்குறதுக்கு இவங்க தான் லாயக்கு நாலடியாரே…
விடு ஜுட்..
இப்பொ கண்டிப்பா பாட்டு வருது…
செய்யாத செய்து நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் – மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
நாளை சந்திப்போமா???