MBA படிக்கலையா MBA ???


ரொம்பவே ஜாலியா MBA படித்து முடித்த அனுபவ பாடம் இது.

எங்கே படிக்கலாம்???

My vote is for Pondicherry University.

Please click Distance Education in http://www.pondiuni.edu.in You will find everything.

Merit & Demerit on this University:

Merits:

No Entrance Test (இந்த வயசில் அந்த சோதனை எல்லாம் தேவையா?)

No assignment (நாம தான் காலேஜிலேயே அதுக்கு எதிர் பார்ட்டிகள் ஆச்சே)

Lowest Fee (வீட்டுக்காரி கிட்ட சொல்ல நல்ல விசயம் இது)

Personal Contact Classes in Sundays & Saterdays for only one month per semester (வீக் என்ட் பார்டிகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்)

Fixed dates for Exams in June & December (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அதையும் மாற்றி தமிழ் உணர்வை நிரூபித்து உள்ளது போதை அரசு சீ…சீ…புதுவை அரசு)

Online facilities: Sumsission of application, Book despatch details, availability of All forms, PCP time Tables,Time Table for Exams, Hall Ticket etc…. etc…(காலையில் 5 மணிக்கே நெட்டில் உட்காரும் மக்களுக்கு இது பெரிய அல்வா)

Questions only from Books (No room for out of syllabus)

Difine this…. Define that மாதிரியான மணப்பாட கேள்விகள் வருவதில்லை.

Only to answer 5 out of 8 question (சில சமயம் எட்டும் எழுதலாம் போல் இருக்கும்…. சில சமயம் எதுவும் எட்டாது)

Case Study for 20 Marks (இது நம்ம குரூப்ல எழுதுற சமாச்சாரங்களை வச்சி கதைவிடலாம்)

No Viva for Project work (சில பல சிடு மூஞ்சிகளிடம் சிக்காமல் தப்பிக்கலாம்)

No time Limit to complete the Course( நம்மளை மாதிரி சோம்பேறிகளுக்காகவே செய்திருப்பாங்களோ???)

Demerit:

சொதப்பலான புத்தகங்கள்…. படிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வரும். இதுக்காகவே தயார் பன்னாங்களோ!!! (நெட்டில் மெட்ராஸ் , அன்னாமலை, IGNOU புத்தகங்கள் கிடைக்கின்றன். அதை வைத்து இதையும் சேத்து பாஸ் பன்னலாம்.)

Ststistics & Operation Research ஆகியவை மறுபடியும் படிக்கனும். (ஏதோ எங்கோ கேட்ட மாதிரி இருக்கா??)

Accountig for Managers கிரிடிட் டெபிட் என்ற குழப்பமான சங்கதியினை படித்து பாஸ் பன்னனும். (எப்படியோ ரெண்டாவது அட்டெம்ட்டில் 50 மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டேன்..)

மூனு மணி நேரத்தில் விடாது 34 பக்கங்களுக்கு குறையாமல் எழுதனும்… கை வழிச்சுப் போகும். (மசாஜ் பன்னத்தான் வீட்ல ஆள் இருக்கில்லெ…)

ரிசல்ட் நெட்ல வரும். நாம் அரியர்ஸ் வாங்கினா வீட்ல நம்ம பசங்க பாப்பாங்க. அதுக்காகவாவது ஒழுங்கு மரியாதையா படிச்சி பாஸ் பன்னனும் (குறைந்த பட்ச கப் வாங்கி)

இது என் அனுபவம்.

வேற எம் பி ஏ பத்தி தெரிஞ்சிக்கனுமா? இன்னும் தேடுங்க..

அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..


அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..என்றும், அப்பொ எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்றும் கேட்கும் பெருசுகளை ரொம்பவவே பாத்திருப்பீங்க.

எனகக்கும் 50 வயது நெருங்குவதால் அந்தக் கூட்டணியில் நானும் சேந்திட்டேன். நானும் என் பங்குக்கு ஆரம்பித்தேன்….

அந்தக் காலத்து ஹோலி மாதிரி இலலையே!!

அந்தமானில் 20 வருடங்களுக்கு முன்பு வரை ஹோலி அன்று வீட்டை விட்டு வெளியில் வநதால் முகத்தில் கலரின் சுவடு தெரியாமல்   வீடுதிரும்ப முடியது.  இன்றோ வெள்ளையயும் சுளையுமா சட்டை போட்டடும் ஹோலி அனறு திரிய முடிகிறது.

முன்பெல்லாம் வீட்டிற்கு கும்பல் கும்பலல்களாக வந்து கலர் அடித்து விட்டுப் போவார்கள். இப்போதோ கீழ் போர்சன் ஆள் கூட வரவில்லை.

விசாரித்த போது தான் தெரிந்தது காலம் மாறிய போது யார் யார் வீட்டிற்கு போவது என்ற குழப்பம் காரணமாய் இருப்பது தெரிந்தது. (ஆமா.. நீ ஏன் ஒரு ரவுண்ட் போகலைங்க்கிற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை)

அரசு வேலைகளிலும் யார் பெரியவர்? யார் யரைப் பாக்க வரனும் இதில் கூட தாமதங்கள் ஆகும்.

இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள்.

எல்லத்துக்கும் ஒரு நல்ல தீர்வு சொல்லட்டுமா??

ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேணுமா?

அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடிங்க.. அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீங்க.

சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே போங்க..

வேகமா போங்க… விமானதிலும் போலாம்..

எப்படி போனாலும் தனியா போங்க… Self Driving தான் போகனும்.

இது தான் tips…

அது சரி… நீங்க எம்பி எம்பி   MBA  நேத்து பாஸ் பன்னிட்டு இன்னெக்கி சொன்னா நாங்க கேட்டுக்கனுமா?? (சந்தடி சாக்கிலெ நானு MBA பாஸ் பன்ன மேடடர் சொல்லலிட்டேன் பாத்தீகளா??)

சரி.. நான் சொன்னா கேக்காடதீங்க!! கம்பன் சொன்னா கேப்பீங்களா???

இப்ப வாரன்…

இராவணன் சீதையை கவர வேண்டும். இதுதான் பிரச்சினை. எக்ஸ்பெர்ட் மாரீசன்.

இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்..  என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டா, நேரில் போகணும். 

நாமும் இந்த மாதிரி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துக்களாமே!!  (அதுக்காக அடுத்தவன் பொண்டாட்டியை தூக்க ஐடியா கேக்காதீங்க….) கருத்து மட்டும் எடுத்துகுங்க.

பாட்டு பாருங்க:

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

மீண்டும் இன்னொரு கோணத்தில் கம்பரை மீண்டு(ம்) பாப்போம்.

இரண்டில் ஒன்று


இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type  கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். ரெண்டில் ஒண்ணு அல்லது அதுக்கு இது பரவாயில்லை மாதிரி வந்து சேரும்.

ரெண்டிலே ஒண்ணு பாத்துட்டுத் தான் மறுவேலை என்று சொல்வதும் இதுக்குத்தானே..

எனக்கு இருந்ததே ரெண்டு வழி தான்.. அதான் வேறு வழி இல்லாமே இவளைக் கை பிடிச்சேன் என்று பேரன் பேத்தி வரும் வரையிலும்  சொல்லிப் புலம்பும் ஆளைப் பாத்திருக்கோம்..

இவனுக்கு வேறு வேலை இல்லை போல… அதான்… முகநூலில் எழுதிட்டே கெடக்கான் என்ற நல்ல பேரும் (!!) எனக்கு உண்டு. Facebook ல் எழுதாதவர்கள் வேறு என்ன வெட்டி முறித்து சாதனை செஞ்சிட்டாகன்னு அவங்க தான் சொல்லனும்.

இரண்டில் ஒண்ணு… அதை என்னிடம் சொல்லு… என்னை விட்டு வேற யாரு என்னைத் தொடுவா?? என்று ஒரு சூப்பர் டி எம் எஸ் பாட்டு இருக்கு.. தலையை தலையை ஆட்டி சிவாஜி பாடும் பாட்டு இத்தனை ஆண்டுக்கு பின்னாடியும் மனசுக்குள் என்னமோ செய்யும்.

ஆனா இந்த ஆப்ஷன் சமாச்சாரத்தில் இன்னும் ஒரு நல்ல சங்காத்தம் இருக்கு. நாலு பதிலில் மூனு இல்லை என்று தெரிந்தாலும் போதும் சரியான விடைக்குப் போய் விடலாம். அப்படித்தானே பாதி பேரு கோன் பனேகா க்ரோர்பதியில் லாக்பதி ஆகி வருகிறார்கள்.

இந்த தப்பான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் போடும் சமாச்சாரம் தான் உலகத்தில் உதைக்கும் உத்தி.. எண்டரன்ஸ் எழுதி ஓய்ந்து போனவர்களின் தகப்பன் தாய்க்கு அந்த வலி நல்லாவே தெரியும்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். ஒரு அண்ணாவுடன் ஒரு மூலிகை தேடும் படலத்தில் நானும் களம் புகுந்தேன். கிட்டத்தட்ட நாலு மணி நேரம் தேடி இருப்போம். கடைசியில் நான் பொறுமை  இழந்து கேட்டேன். அந்த மூலிகை இலை எப்படி இருக்கும்? என்று

எனக்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா??

தெரியாது.

இப்படித் தான் பலர் வாழ்க்கை எனும் வண்டி ஓடிண்டிருக்கு… என்ன செய்வது எங்கே போவது என்று கூட தெரியாமல்.

MBA பாடிச்சதாலே கொஞ்சம் நிர்வகம் பத்தியும் எழுதியாக வேணுமே!!!

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும்.

சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஜெஸ்டெட்டனர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. அதில் VRS வாங்கி வந்து Travels  நடத்தும் மனிதரின் டர்னோவர் கோடிக்கு மேலாம். அதன் முதலாளி ஞாயிறு அன்று ஓட்டுனர் இல்லாததால்  அவரே ஓட்டி வந்தார் பூனேயில். அஞ்சு பத்துக்கு அல்லாடும் ஆளுக்கு கோடீஸ்வரர் டிரைவர். கையில் ஐ பேடு இருந்தது ஒரு கொசுறுத் தகவல்.

இவ்வளவு சொன்ன பிறகு ராமாயணத்தை தொடாமல் விட்டால், என்னைத் தூக்கம் எப்படித் தொடும்?? உங்களுக்கு வருமா என்பது எனக்குத் தெரியாது.. என்னோட ராமாயண மெயில்கள் இல்லாமல் கொஞ்ச நாளா மக்கள் நிம்மதியா தூங்குவதாய் அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமாயண காட்சி…

பிரபுவும் கார்த்திக்கும் மோதுவது மாதிரியான இடம். ரெண்டு பேரும் ஹீரோக்கள் தான். ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சோகம்.

ராமனும் சுக்ரீவனும் தான் நான் சொல்லும் ஹீரோக்கள்.. ரெண்டு பேரும் மனைவியைப் பிரிந்தவர்கள்… ஆனா என்ன.. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா… நெஜமாவே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று புலம்பா குடும்பஸ்தர்கள்.. பொண்டாட்டிகளை ஊருக்கு அனுப்பிவிட்டு facebook ல் வலம் வரும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போல்… (கார்த்திக் சங்கீதா தம்பதிகள் சண்டைக்கு வராதீங்க)

அனுமன் நைஸா ஆரம்பிக்கிறார்.  ஏ .. ராசா… (சுக்ரீவனைப் பாத்து தான்) இவங்களைப் பாத்தா உங்க Better half ஐ தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரியுது.  என்கெஸ்கிறார்.

சுக்ரீவனோ… இந்த ஆளே பெண்டாட்டி பறி குடுத்த ஆளு. இந்த மணுஷன் நம்ம பார்ட்டியை கண்டு பிடிச்சி தருவாரா???

சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது.

ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது..

அடுத்த கேள்வி.. யாரு மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது…?

நம்ம எக்ஸாமிலே என்ன செய்வோம்… நல்லா பதில் தெரிஞ்ச கேள்விக்கு மொதல்லே பதில் எழுதலாம்னு தானே தோணும் எல்லாருக்கும்??

அதே… அதே தான் அந்த ரெண்டில் ஒரு ஆப்ஷன் தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.

ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இடம் எங்கே என்பதே ஒன்னும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிஞ்ச இடத்துக்கு உடன் போவோம். இப்படித்தான் முடிவானது அந்த வாலியின்  முடிவின் ஆஆரம்பம்.வு.

நீங்களும் இப்படி யோசிச்சி முடிவு எடுங்க… (அதுக்காக பொண்டாட்டியை தொலைச்சிட்டு வந்து நிக்காதீங்க). பிரச்சினைகளை இப்படி அலசி பாத்து முடிவு எடுங்க…

கம்பர் பாட்டு… இது உங்களுக்கு டெஸ்ட்.. யாராவது பாட்டு புடிச்சு சொல்லுங்க பாக்கலாம்.

 ஹி ஹி… கமப ராமாயணம் கையயில் இல்லாமல் இந்திர சௌந்தரராஜன்  எழுதிய சுந்தரகாண்டம் படிதத்ததின் விளைவு தான் இந்த போஸ்டிங்..

 இதுவும்…. இப்படியும் தொடரும் (புரட்டாசியில் எது செய்தாலும் புண்ணியம் தானே???)