எக்சல் என்றால் கணக்கு போடும் சமாச்சாரம்…. கட்டம் போட்ட வேர்ட்…என்று அவ்வளவாய் மக்கள் அதன் உள்ளே பலர் போவதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
சரி அந்த குறையை நிவர்த்திக்க நாம ஏதாவது செய்யலாமே??? சும்மா பேசிட்டு இருந்தா யாருக்கு என்ன பிரயோஜனம்???
அவங்க அவங்க்களுக்கு ஆயிரம் ஜோலி இருக்கு… நாம் செய்ய வேண்டிய வேலைகள், ஞாபகப் படுத்த வேண்டிய வேலைகள், Due Date போன்ற சமாச்சாரங்கள் ஏகமா இருக்கு..
எல்லாத்தையும் நம்ம மூளை எப்படி ஞாபகம் வச்சிருக்கும்??? (இருக்கிறதே..கொஞ்ச மூளை..)
இதை எக்சல் வச்சி எப்படி சமாளிக்கலாம்கிறது தான் இன்றைய பாடம்…
செய்ய வேண்டிய முடிக்க வேண்டிய வேலைகளை ஒரு லிஸ்ட் போட்டு எக்சலில் தட்டிட்டே வர்ரீங்க… அப்புறம் ஒரு செல்லில் பச்சை கலரில் உங்களுக்கு சிகனல் தரும்… Due Date வந்த அன்னெக்கி சிவப்பு கலரில் மாறிடும்… நல்லா கீதா???
எப்படி பன்றது??
முதல் கம்பத்தில் (Column A) ல் தேதி போட்டுக்குங்க…
B Cloumn நினைவு படுத்த வேண்டிய வேலையை எழுதிக்கிங்க…
அடுத்ததில் எத்தனை நாள் கழித்து தேவையோ…அதை போடுங்க… பத்து நாள் என்றால் 8 நாள் என்று போடுங்க…ஒரு ரெண்டு நாள் Gap கையில் இருக்கட்டும்… இதை மட்டும் செய்தால் அது Raw Data..
இனி Processing Portion க்கு வருவோம்…
Sample Data:
A1 Date
A2 19/07/2011
B1 Name of Reminder
B2 To submit Project Report
C1 Time in days
C2 15
D1 Target
இங்கே தான் வித்தை ஆரம்பம்..
D2 =A2+C2
ஒரு தேதி வந்து நிக்கும்…
அதுக்கு தான் கலர் தரனும்.. என்ன பண்றது??? ரொம்ப Simple….Conditional formatting செய்யனும்…
கண்ணுக்கு தெரியாத (உங்களுக்கு மட்டும் தெரியும் செல்லில் =Today() போட்டு வைங்க…அது ஒண்ணும் இல்லை…System Date காட்டும்.. H1 ல் அது இருக்கட்டுமே…
Go to Conditional formatting
Compare the Cell D2 & H1 if Greater than or equal…select Green Colur
if less than…select Red Colour..
ஒரு தடவை செஞ்சி பாருங்க…
நூத்துக்கனக்கான வேலைகள் இருந்தாலும்..அன்னெக்கி செய்ய வேண்டிய வேலைகள் ஜம்முன்னு சிவப்பு கலர்ல காட்டும்… உங்க பாஸ் கிட்டே சபாஷ் வாங்கலாம்…அப்படியே நமக்கும் ஏதாவது டிரீட் வைங்க….
இத்துடன் இன்றைய எகசல் முதல் பாடம் நிறைவுற்றது… அடுத்த பாடம் விரைவில்