பாமரன் பார்வையில் ஃபாரின் – 86


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ

பாரதி தன் கண்ணம்மாவுக்கு கற்பனையில் வைத்த பெயர்…

மலேசியாவின் அருங்காட்சியகத்தில் படம் பார்த்ததும், இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அப்படியே தொடர்ந்து இந்தப் பாட்டும் காதுகளில் ஒலித்தது…

சம்மதமா ???

நான் உங்கள் கூட வர சம்மதமா?

சரி சமமாக நிழல் போலே
நான் கூட வர
சம்மதமா?
நான் உங்கள் கூட வர சம்மதமா?

மலேசியாவிலும் மறக்க முடியாத அந்த வசீகர முகம்.. யார் இவர்?

மூன்று மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய முதல் பெண்; திரைப்பட ஸ்டூடியோ அமைத்து நிர்வகித்த முதல் பெண். கர்நாடக இசை பாடகி, நவரச நடிகை, திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், திரைப்பட இயக்குன…
பாடலாசிரியர், படத்தயாரிப்பாளர், பரணி ஸ்டூடியோ அதிபர், கைரேகை நிபுணர், ஜோசியர், கண்டிப்பான எஜமானி (எல்லா வீட்டு அம்மணி போல்).

இந்திய அரசு, இரண்டு தேசிய விருதும் தந்து தபால் தலையும் வெளியிட்டிருக்கு.

எனக்கு என்னமோ, இதே பெயரில் ஒன்பதாம் வகுப்பில் உடன்படித்த மாணவி தான் நினைவுக்கு வருது.

ஆமா… உங்களுக்கு?

பாமரன் பார்வையில் ஃபாரின் – 84


தமிழ்த் திரையுலகம் நமக்கு பல சொற்கள், புதுப் பொருள் தரும் சொற்றொடர்களையும் தந்திருக்கிறது.

சம்பவம்

அவனா நீ?

தேவையில்லாத ஆணி

அரசியலில் சகஜமப்பா

அதான் இது

அது வேற வாயி

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

இப்படி அவற்றில் சில.

மலேசியாவில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை பத்திரப்படுத்தி, காட்சிக்கும் வைத்திருந்தனர். . எனக்கு என்னவோ அந்த கவுண்டமணி ஜோக்கை விட பெட்ரோமாக்ஸ் தொடர்பான இன்னொரு சம்பவம் (!) தான் நினைவுக்கு வந்தது.

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஓர் ஊர்வலத்தில் வாசிதபடி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அருகில், அவரின் ஒரு வாசிப்பைக் கேட்டு, தான் தூக்கி வந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை சபாஷ் என தூக்கிப் போட்டு, மீண்டும் பிடித்தாரம்

அந்த சபாஷ் தனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதை விடவும் உயர்வு என அவரே சொன்னாராம்.

இனி பெட்ரோமேக்ஸ் லைட் பார்க்கும் போதெல்லாம் வித்வான் ராஜரத்னம் பிள்ளை நினைவுக்கு வரட்டும்.