வரமா சாபமா??


அன்பு நெஞ்சங்களே…

உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாச் சிரிங்கன்னு சொன்னா … என்ன தோணும்?? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு தோணாதா??

ஆனா வள்ளுவர் மட்டும் எப்படி இடுக்கண் வருங்கால் சிரிங்கன்னாரு??

ஒரு வேளை இந்த LAUGHTER THEREOPHY அது இதுன்னு ஏதாவது அந்தக் காலத்திலேயே நெனைச்சி சொல்லிட்டாரோ!!! இருக்கலாம்.. யார் கண்டது??

எல்லாம் நன்மைக்கேன்னு இருக்கிறது ரொம்ப நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கலைன்னாலும் சரி…எல்லாம் நல்லதுக்குன்னே இருக்கிறது… ரொம்பவும் பக்குவமான நிலை..

சோகத்தின் உச்சியில் இருப்பவர்க்கு தெம்பூட்ட சொல்லப்படும் ஒரு கதை இதோ..(ஏற்கனவே கேட்ட கதை தானோ??)

காட்டில் ஒரு இளைஞனை சிங்கம் துரத்துகிறது. ஓடினான்.. ஓடினான்… ஒரு பாழுங்கினற்றின் ஓரத்தில் இடறி விழுந்தான்… விழும் போது ஒரு வேர் கையில் கிடைக்க அந்தரத்தில் தொங்கினான். கிணற்றின் கீழ் மதம் பிடித்த யானை… நீ கீழே
விழுந்தால்.. ஒரே மிதி என்று பிளிறுகிறது. மேலே சிங்கம்.. மேலே வா.. எனக்கு விருந்து நீ தான் என்று சிலிர்க்கிறது. அந்த நேரத்தில் ஒரு அணில் வேறு அந்த வேரைக் கடித்து வருகிறது…

எல்லாம் ஒரே சாபமான செயல்கள் தான்… எதிர்பாராத விதமாய் ஒரு மரத்து தேன் துளி வந்து அந்த இளைஞனின் உதட்டில் விழுகிறது… வரம் போல்..

அந்த நேரத்திலும் தேனை ரசிக்கச் சொல்லுவது தான் வாழ்வின் ரகசியம்..

கம்பரின் காவியத்திலும் இந்த வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருது.

வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்
இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று.
இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போவுது” ன்னு “எம் பொண்டாட்டி.. நிஜமாவே ஊருக்குப் போயிட்டா” என்று ஜனகராஜ் குதிப்பது போல் குதித்தாராம் அந்த ராஜா…

சாபம் வரமான கதை எப்படி இருக்கு??

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா??

இந்த சாபம் வரமான தகவலை ராஜா தன்னோட முதல் பொண்டாட்டிக்கே ராமன் காட்டிற்கு போகும் போது தான் சொல்கிறார்.

எல்லாத்தையும் பொண்டாட்டியிடம் கொட்டித் தீர்க்கும் ஆண் மக்களே… கொஞ்சம் கவனிங்க…

இவ்வளவு படிச்சவங்க அந்த பாட்டையும் கொஞ்சம் படிங்களேன்.. ப்ளீஸ்..

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.

கம்பனின் கலக்கல் இன்னும் வரும்…

அது சரி…..இந்த மாதிரி போஸ்டிங்க் விடாமெ தொடர்ந்து வருதே…

இது வரமா??? சாபமா??

மகிழ் விற்கும் மகளிர்


இந்தக் கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபத்திய முக்கியமான பிளேயர்கள் யார் தெரியுமா? சச்சின்? டோனி ??.. இல்லை.. இவங்க யாருமே இல்லை.

கைகளில் கலர்கலராயும், நிறைஞ்ச நெஞ்சோடும், குறைந்த ஆடைகளோடும், அனைவரையும் உற்சாகப் படுத்தும் Cheer Girls தான் அவர்கள்.

நான் அவர்களை மகிழ் விற்கும் மகளிர் என்கிறேன். (உற்சாக பாணக் கொண்டாட்டங்களில் Cheers க்கு தமிழில் “மகிழ்வோம்” என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

அந்த மகளிர் ஆடும் ஆட்டத்திற்கு ஏதும் வரையறை இருக்கா..என்ன? ஒண்ணும் இருக்கிற மாதிரி தெரியல்லை.. கிடையாது.. சும்மா தத்தக்கா புத்தக்கா என்று ஆடுகிறார்கள். (அதுக்கும் டிரைனிங்க் தருவங்களோ?!!)

சந்தோஷம் வந்தா தலை கீழ் தெரியாம ஆட்றதுங்கிறது அது தானோ?  ஆனா தண்ணி அடிச்ச ஆட்களும் நல்ல சங்கதிகளை உளறும் சிச்சுவேஷனும் இருக்கு.

ஓஹோஒஹோ கிக்கு ஏறுதே… என்று ரஜினி படத்தில் ஒரு பாட்டு வரும். அருமையான தத்துவப் பாடல் இது.. என்னமோ கிக்கு ஏத்துற பாட்டா இருக்கு… இது எப்படி தத்துவப் பாடலாகும்?

நடுவில் வரும் வார்த்தைகள் –

கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே- அட
தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே – இந்த
வாழ்க்கை வாழத்தான் –பிறக்கையில் கையில்
என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..??

பாத்தா ஏதொ சித்தர்கள் பாட்டு மாதிரி இருக்கு பாருங்க.. ஆன மகிழ்விற்குப் பிறகு பாடும் பாடல் அது..

சரி..எதுக்கு இவ்வளவு பீடிகை…??…அது ஒண்ணுமில்லை

அந்தக் காலத்திலும் இப்படி மகிழ்விற்கும் படியான ஒரு நிகழ்வு கெடைச்சது.. அதான்.. கொஞ்சம்….

என்னடா இழுவை… மிச்சத்தைச் சொல்றா…

வந்தேனே…… சொல்ல வந்தேனே…

ஒரு அரன்மனையில் நடந்த கூத்து இது.

அங்கே எல்லாரும் சந்தோஷக் கடலில் மூழ்கிட்டாங்களாம். இன்பம் அப்படியே இதயத்துக்கு போச்சாம்..அப்புறம் ஓவர்ஃப்ளோ ஆகி மயிர்க்கால்கள் வரை வந்திடுச்சாம்.

உடம்போடு அப்புடியே சொர்க்கத்துக்கு போயிட்டாகளாம்.

ராஜா முன்னாடி எப்படி இருக்கனுமோ அப்படி இல்லாமெ இருந்தங்களாம்.

அந்த சரக்கு எப்படி இருந்தது தெரியுமா? (பெப்ஸியோடு விஸ்கி கலந்த மாதிரி) இனிப்பா இருந்ததாம்.

அது சரி அது எந்த அரன்மனை தெரியுமா?

தசரதன் அரசாட்சி செய்யும் அரன்மனையில்.

அடப்பாவமே… இவ்வளவு மோசமாவா மிதந்து கிடந்தாய்ங்க??

ஹலோ… ஹலோ…கொஞ்சம் இருங்க….அவங்க எதுக்கு இப்படி மிதப்பில் இருந்தாக தெரியுமா??

அதான் சரக்கு அடிச்சதுன்னு தெரியுதே… அதான் கிடையாது…

வரும்…வராராது மாதிரி, இங்கே சரக்கு அடிக்கலை….ஆனா…அடிச்ச மாதிரி.

கம்பர் வார்த்தையில் சொன்னா…கள் சாப்பிட்ட மா….திரி..

ஆனா “கள்” என்ன தெரியுமா? தசரதன் வாயிலிருந்து வந்த சொல்.. அது என்ன அப்படி கிக் ஏத்துற சொல்…?

ராமன் அரசனாக முடி சூட இருக்கிறான் என்ற சொல் தான் இந்த மொத்த கூத்துக்கும் காரணமாம். (கம்பர் கூட வாக்கியம் என்று சொல்லாமெ சொல் என்று சொன்னதும் – உச்சம்)

என்னமோ தெரியலை இப்பொல்லாம் கம்பரை கையில ப(பு)டிச்சாலே கிக்காத்தான் இருக்கு.அதே கிக்கோட பாட்டையும் படிச்சிருங்க:

இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்.

மீண்டும் நாளை மகிழ்வோமா??

காக்கை உக்கார பனம்பழம்…


தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இமாலய உயரத்தை எட்டியவர் தான் TMS.  அவரின் கலையுலக பயணத்தை நிறுத்தியது எது? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அவரது குரல் வளத்தில் குறையொன்றும் இல்லை இன்றுவரை. உள்ளம் உருகுதைய்யா என்று உள்ளம் உருகப் பாடியதை தினமும் கேட்ட முருகனும் ஒண்றும் செய்ய முடியாதவராய் ஆகி விட்டார்.

காகம் உக்கார பனம்பழம் விழுந்த கதையாய் TMS “என் கதை முடியும் நேரம் இது….” என்று பாடியதால் இப்படி ஆனது என்றார்கள்… ஆனால் இதை ஏற்றுக் கொள்ளவா முடியும்?. TMS  பாடாத சோகப் பாடலா?, சோதனை மேல் சோதனை, எங்கே நிம்மதி?… இப்படி பல இருக்க, இந்த என் கதை முடியும் நேரம் அந்த கெட்ட பேரை எடுத்துக் கொண்டது.

இதே ஜாதியில் “நான் ஒரு ராசியில்லா ராஜா..” என்ற பாடலும். பாட சற்றே சிரமமான பாட்டாய் இருந்தாலும் நான் கொஞ்சம் இதை நல்ல விதமாய் (கரோக்கியில் தான்) பாடிக் காட்ட… இதை மேடையில் பாட வேண்டுகோள் வந்தது.. நான் யோசிக்கிறேன்… மேடைக்கு ராசி இல்லாதவன் ஆயிட்டா?? இந்த குரூப் அதுக்கு எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பாக்கலாம்.

சில வார்த்தைகள் அவை அந்த அர்த்தத்தில் சொல்லப்படா விட்டாலும் ஏதோ ஒரு காரணம் கருதி அந்த வார்த்தை வந்து விழுகலாம்.

 பண்ணித் தலையா… மண்வெட்டித்தலையா … என்று பேசி வலம் வந்த கவுண்டமனி செந்தில்களை எந்த வார்த்தையும் ஒன்றும் செய்யவில்லை.

ஆனா அதே வார்த்தையை தேவரத்தில் சொல்லப் போக… சிவனுக்கே நல்ல காலம் இன்னும் வராமல் இருக்கு.

சமீபத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். மேல்மருவத்தூருக்கு 40 கிமீ முன்பு ஓர் ஊர் கடந்து போனது.. பாதிரிப்புலியூர். இதைப் படித்தவுடன், அடடா… தேவரத்தில் இந்த ஊர் சிவன் பத்தி, ஒரு பாட்டு இருக்கே.. அதைப் பாத்துட்டு வரலமேன்னு திருப்பினேன் வண்டியை.

விசாரித்து போனால், பாழடைந்த கோவில்… பரிதாபமாய் நந்தியும் சிவனும்.. கோபுரங்கள் எல்லாம் சாய்ந்து  இருந்தது. அதே பாட்டை பாட உள்ளே சென்றால் வௌவ்வால் மணத்துடன் சின்னதாய் விளக்கும்… அங்கே அதே சிரித்த முகத்துடன் சிவன்.

கவுண்டமணி செந்திலை திட்டுவது போல், தேவாரத்தில் தீவட்டித்தலையா… உன் தலையில் கொள்ளி வைக்க என்பது போல் தோன்றும் பாட்டு இது..

 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்

செழுநீர் புனர் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே..

 

தீ வண்ணன் நிலை பாத்தா கண்ணீர் வந்தது.. கடவுளுக்கே இந்த நிலையா??

 கம்பர் திடீரென்று தேன்றினார்..

 இது ரொம்ப தப்பு… இம்புட்டு நாளும் நான் தான் கிளைமாக்ஸில் வந்து போவேன்.. இன்னெக்கி எப்படி தேவாரம் வரலாம்??

 என்ன சொல்றீங்க கம்பரே… இந்த சிச்சுவேஷனுக்கு உங்களால் பாட்டு தர முடியுமா??

 கம்பர் ஏமாற்றவில்லை…

 நீ TMS க்காக இப்படி கவலைப் பட்டு கேக்குறே… இங்கே தசரதன் வாயிலிருந்து வரும் வார்த்தை பாரு. அறுபது ஆயிரம் மனைவிகள், அதிகாரப் பூர்வமா மூன்று மனைவிகள்.. நிறைவாக நரை தெரியும் வரை ஆட்சி (மூன்று மனைவிகள் இருந்தால் அந்த பாக்கியம் தானா வருமோ???) நான் நெறைய கஷ்டப்பட்டேன்.. இனி ராமனும் கஷ்டப்படட்டும்… பட்டபிஷேகத்துக்கு முன்பு வந்து விழுந்த வர்த்தைகள்.. ராமன் படப்போகும் சிரமத்தின் எச்சரிக்கை மணிகளா??/ 

 தசரதன் சொல்கிறார்: ுள்ளெயே இல்லையேன்னு ரொம்ப கவலைப்பட்டுக் கிடந்தேன் பலகாலம். அதுக்கப்புறம் தான் வந்தான் ராமன். என் தலையில் இருக்கும் பாரத்தை அவன் கைக்கு மாத்தனும். அவனும் கொஞ்சம் கஷ்டப் படட்டும்.. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமான்னு நெனெக்கிறென்.

  ைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்

ொந்தனென் இராமன் என் நோவே நீக்குவான்

வந்தனன் இனி அவன் வருந்த யான் பிழைத்து

உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்.

ப்போ சொல்லுங்க…

ான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டு பாடித்தான் ஆகனுமா??