குறள் – 4


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)

கடவுள் ஒரு காமெடி படம் மாதிரி…லாஜிக் எல்லாம் கிடையது… உள்ளே போய் உக்காந்தா ஒரே ஜாலி தான். கடவுள் என்ற படமும் தான்.

Translation :
His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain.

Explanation :
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

குறள் – 375


 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. (375.)

நேரம் நல்லா இருந்தா… மழைநேரத்திலும் கொடை பிடிக்காமெ வெடி வெடிக்கலாம்.
ஆனா நேரம் மட்டும் நல்லா இல்லாட்டி, கொடை இருந்தாலும் மழையில்தான் நனையனும்.

Translation :
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

Explanation :
In the acquisition of property, every thing favorable becomes unfavorable, and (on the other hand) everything unfavorable becomes favorable, (through the power of fate).

குறள் – 1112


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. (1112)

நெஞ்சே..நெஞ்சே மயங்காதே…

கண்ணுக்கும் பூவுக்கும் வித்தியாசம் இல்லையா???

நெஞ்சே ..நெஞ்சே மயங்காதே…

Translation :
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!

Explanation :
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.

குறள் 786


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

பீர் கிடைக்க சிரிப்பது செயற்கை நட்பு;
அன்பு சேர்ந்தே இருப்பது இயற்கை நட்பு.

Not the face’s smile of welcome shows the friend sincere,
But the heart’s rejoicing gladness when the friend is near.

Explanation :
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

பார்க்கும் போது முகம் மட்டும் மலர நட்புச் செய்வது சிறந்த நட்பாகாது. அன்பினால் அகமும் மலர நட்புச் செய்வதே சிறந்த நட்பாகும்.