மறைந்திருந்து காட்டும் கம்பன் – 3
கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….
*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்*
என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;
– இப்படி, கவலையில் இருக்கும் சீதையைக் குறிப்பிடுகிறார் கம்பர். இடை இருக்கிறதா? இல்லையா?என்பது தெரியவில்லை. மின்னல் போல் இருக்கிறதாம்! ஆனால் இடை இருப்பதை ஒரு ஆபரணம் கொண்டுதான் கண்டுபிடிக்க இயல்கிறதாம்! இது கம்பர் கற்பனை.
பெயர் சொல்லாமல், பெயருக்குரியவர் எப்படி இருந்தார் என்பதை சொல்லிட நாம் கம்பனிடம் தான் கற்க வேண்டும்.
என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;*
‘ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்
பொன்றும்பொழுதே, புகழ் பூணும்’ எனா,
மின்னலை ஒத்திருக்கும் இடையையும் விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி என்று பலவாறு நினைந்து பெருமூச்சுவிட்டு வருத்தம் அடைவாளாகிய பிராட்டி, உறுதிபெற்று என்னுடன் ஒன்றுபட்டுள்ள என் உயிர் இருந்தது என்றால் துன்பம் உள்ளதாகும் நான் இறக்கும் சமயத்தில்தான் புகழ் என்னைச் சேரும் என்று கருதி.
[5344 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*