நஞ்சு அனையான்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 5*

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

நஞ்சு அனையான்

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான் –

என்று சீதை சொல்வதாய் சொல்கிறது கம்பன் வரிகள்.

சோகத்தில் சீதை புலம்பும் இடத்தில் கம்பன் இட்ட வரிகள் இவை. *விடம் போன்றவன்* என்று இராவணனை குறிக்கப் பயன்படுத்திய உத்தி.

தனியே புலம்பும் போது பயன் படுத்துவது என்ன வீரம் இருக்கிறது? இதே வார்த்தையினை திரிசடையிடமே சொல்வதாயும் கம்பன் வீரமாய் படைத்தமை தான் கம்பனின் சிறப்பு.

இதோ அந்த இரு பாடல்களையும் முழுதும் பார்க்கலாம்:

‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, என்

மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ? [5351]

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி *விடம் போன்ற இராவணனின்* வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

திரிசடையிடம் சொன்ன கம்பன் வரிகள் இதோ:

*’நஞ்சு அனையான்*, வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?’என்றாள். [5103]

பயப்படாதே என்று கருணை காட்டுபவளே! *விடம் போன்ற இராவணன்* காட்டிலே வஞ்சகத்தைப் புரிய எண்ணி (பஞ்சவடியை) அடைந்த அன்று வலப்புற அங்கங்கள் துடித்தன ; (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும் இப்போது குறைவில்லாதன இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும் என்னை வந்து அடையும் நன்மை யாது? என்று கூறினாள்.

[5103சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

Advertisement

One thought on “நஞ்சு அனையான்

  1. upamanyublog says:

    படித்துப் பொழுத்தைக் கழித்து, எங்களையும் படிக்க வைத்து, எங்களது பொழுதையும் கழிக்க வைக்கும்தொண்டு சாலச் சிறந்ததே !
    ஓ.எஸ்.ஸுப்ரமணியன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s