நேத்து பறிச்ச ரோஜா..
நான் பாத்து பறிச்ச ரோஜா..
நேத்து பறிச்ச ரோஜா..
நான் பாத்து பறிச்ச ரோஜா..
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது
இப்படி ஒரு பழைய பாட்டு இருக்கு. நாமே செய்வதில் ஒரு திரில் தான். கூட்டமா ஆட்கள் பக்கத்தில் இருந்தாலும் நாம செல்ஃபி எடுப்பது மாதிரியான சுகம்..

மலேசியாவின் கமரான் பகுதியில் நாமளே பறிச்சி சாப்பிட ஏதுவாக ஏற்பாடு. ஸ்டிராபெரி தான்… (வேறு என்ன நெனெச்சீங்க?)
எது இனிக்கும்? எது காய்? எல்லாம் தெரியாமல் ஒரு அட்டெம்ட் அடிக்கலாம். புளிப்பதெல்லாம் நாம் சாப்பிட்டு. இனிப்பா இருப்பதெல்லாம் அம்மணி கையில் குடுத்ததால் அன்றைய இராசிபலன் சுபதினமாய் அமைந்தது.