அந்தமானில் இருந்தபோது, மார்கழி வந்தாலே போதும் ஏக்கமும் கூடவே வரும்.
மார்கழி மாசம்னாலே ஊரெல்லாம் எப்படி இருக்கும்? ஒரே பக்திமயமா இருக்கும்.
அதிகாலை கோலம். (அதனை இடும் தோகை இல்லா மயில்கள்) பொங்கல், சுண்டால் இவைகளோடு சீர்காழியும் ஐயப்பனும் கூட்டு சேர்ந்து டி எம் எஸ்சுடன் பக்தி ரசம் ஊட்டுவர்.
அந்தமானில் அப்படி இல்லையே! இப்படி நான்கைந்து ஆண்டு புலம்பலுக்குப் பின், அட…நாமளும் மார்கழி பூசை ஆரம்பித்தால் என்ன? இப்படி இலக்கிய மன்றம் யோசித்தது.
அதிகாலையில் நாம் எழுந்து குளித்து கோவிலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும், கோயில் குருக்கள் தயாராக வேண்டும், சாமியையும் அலக்கரிக்க வேண்டும், பிரசாதம் சமைக்க வேண்டும். இத்தனை டும்டும் டும் நடுவில் நிர்வாகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எல்லாம் நடந்தது. அந்தமான் தமிழர்கள் மத்தியில் கிருஷ்ணன் அவ்வளவு பிரபலம் இல்லாத காரணத்தால் சிவனை அனுகினோம். மௌனத்தை சம்மதம் ஆக்கினோம்.
திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாட யூடியூப் உதவியது. ஆறாவது ஆண்டாக அந்தமானில் மார்கழி பூசை தொடர்கிறது.

மலேசியாவின் கேமரென் பகுதி முருகன் கோவிலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மார்கழி பூசை நடந்து வந்தது. நமக்காகவே முருகன் ஒரு நாளில் உபயதாரர் இல்லாது வைத்திருந்தார்.
மலாசியாவிலும் மார்கழி பூசை நடந்தது.