எழுச்சிக் கவிஞர் சிநேகன்
அந்தமான் தீவுகளில் ஒரு பொங்கல் விழா சிறப்பு நிகழ்வுக்காய் ‘எழுச்சிக் கவிஞர் சிநேகன்’ அவர்கள் வந்திருந்தார்கள். பொங்கல் விழா இனிதே முடிந்தது.
”அந்தமான் வருவோர் அனைவரும் போக விரும்பும் இடமான, ஹாவ்லாக் (தற்போது ஸ்வராஜ் தீப்) தீவிற்கு செல்ல ஏற்பாடு செய்யலாமா?” என்று கேட்டபோது கவிஞர் மறுத்தார்.
”ஏதாவது பள்ளிக்குப் போவோம், அதுவும் சற்றே தள்ளி கிராமப்புறப் பள்ளியாய் இருந்தால் நலம்” என்றார்.
பாத்துபஸ்தி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் சினேகன் அவர்களை அழைத்துச் சென்றோம்.

முன்னேற்பாடு ஏதுமின்றி செய்ததால் மேடை போன்ற ஏற்பாடுகள் இல்லை. அப்போது எதிர்பாராத விதமாய் மின் தடையும் ஏற்பட்டது. பேட்டரியுடன் கூடிய மைக் வைத்துக் கொண்டு ஆசிரியர்களுடன் உரையாடினார். மாணவர்களுடனும் எழுச்சியூட்டும் பேச்சினை வழங்கினார்.
அடுத்த தலைமுறைக்குத் தமிழ் உணர்வு வளர்ந்திட எழுச்சிக் கவிஞர் சிநேகன் அவர்கள் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியது.
தொடரும் அடுத்த விஐபி கிருபானந்த வாரியார்