கவிஞர் புலமைப்பித்தன்
அந்தமானில் பொங்கல் விழா, சித்திரை விழா, பாரதி பாரதிதாசன் விழாக்கள் மிகவும் சிறப்பாய் நடைபெறும்.
ஒருமுறை சித்திரை விழாவில், கவிஞர் புலமைப்பித்தன் சிறப்புரை ஆற்ற வந்திருந்தார். அப்போது தான், அந்தமான் தமிழர் சங்கம் பொருளாதார ரீதியாய் வளர்ந்து வரும் நேரம்; சிறப்பு விருந்தினரும், தமிழர் சங்க நிதி நிலையினைக் கருத்தில் கொண்டு, ’சன்மானத்தொகை ஏதும் வேண்டாம்’ என மறுத்தார்.
தலைவராய் இருந்த கராத்தே மாஸ்டர் அவர்கள், எங்களின் அழைப்பின் பேரில் வந்த காரணத்தால் ’சன்மானம் வாங்கியே ஆக வேண்டும்; என அன்பாய் வேண்டவே, சன்மானம் வாங்கிடச் சம்மதித்தார்.
விழா மேடையில் தமிழர் சங்க தலைவர், கவிஞர் புலமைப்பித்தனுக்கு சன்மானம் தந்தார். அதனை அப்படியே வாங்கி, சங்கச் செயலர் வசம் ”தமிழர் சங்க வளர்ச்சிக்காக என் தரப்பு நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று வலது கையில் வாங்கியதை வலது கையாலேயே திருப்பித் தந்தார் கவிஞர்.
ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு தந்தால் தான் வர இயலும் எனப் பலர் பிழைக்கும் நிலையில் இருக்க, கவிஞர் புலமைப்பித்தனின் இச்செயல் வியக்கவைத்தது.
[தகவல் உதவி: தமிழர் சங்க அப்போதைய செயலர் திரு ஜெயராமன் அவர்கள்]
தொடரும் அடுத்த விஐபி எஸ் பி பாலசுப்பிரமணியம்