சிவகார்த்திகேயன்
அந்தமானில் நடந்த ஓர் இசை விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் என்றதும் நீங்கள், கதாநாயகனாய் இன்று மலர்ந்திருக்கும் ஹீரோவை எதிர்பார்ப்பீர்கள்.
வந்தவர் அந்த சிவகார்த்திகேயன் இல்லை. அவர் அப்போது டிவி நிகழ்ச்சி அறிவிப்பாளர். இசை விழா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவே வந்திருந்தார். அவருடன் அல்வா வாசு; (குள்ளக்)கிங்காங் ஆகியோரும் வந்திருந்தனர்.
வழக்கம் போல் நிகழ்ச்சி முடிந்து இரவு விருந்தின் போது அப்படியே பேச்சுக் கொடுத்தோம். ”சினிமா டீவின்னு பொழெப்பு நல்லாத்தானே போயிட்டிருக்கு? இன்னும் எதுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் செய்றீங்க?” சிவகார்திகேயன் மீது வீசப்பட்ட கேள்வி இது.
”இந்தக் கேள்விக்கு, அண்ணன் அல்வா வாசு, பதில் சொன்னா நல்லா இருக்கும். சொல்லுங்கண்ணே…”. என்றார்.
அதுவரை ஜாலியாய் பேசியவர், குரல் லேசாய் தழுதழுத்தது. ”நாம நடிக்கும் எல்லா படத்திலும் பனியனோ, அல்லது அதுவும் இல்லாமலும் தான் அடி வாங்கிட்டு நடிக்கிறோம். இந்த மாதிரி கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் தான், நல்ல சட்டை பேண்ட் போட்டு உங்கள் முன் வர முடியுது. அதுவும் புடிக்கலையா உங்களுக்கு”
சிவகார்த்திகேயன் முடித்தார், ”இது தான் சார் காரணம்”;
உடன் வந்திருக்கும் துணை நடிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்ததோடு, அவர்களையும் இரசிகர்களோடு பேச வைத்ததும் வியப்பாய் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி ஜி கே வாசன்