தளபதி ஸ்டாலின்
அந்தமானில் அரசியல் கட்சி சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்காய் தளபதி ஸ்டாலின் அவர்கள் வந்திருந்தார். அவர் ஒரு கட்சி சார்ந்த தலைவராய் இருப்பதால், மற்ற கட்சி சார்பு உள்ளவர்களும், அரசு ஊழியர்களும் அவரை சந்தித்து உரையாட முடியாத நிலை இருந்தது.
எனவே, ‘******** பண்பாட்டு மன்றம்’ என ஒரு பேணர் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கலாம் என்ற திட்டம் செயலாக்கம் பெற்றது.
மத்திய அரசு அதிகாரி என்பதால், அரசுக்கு எதிராக ஏதும் சொல்லிவிடக் கூடாது என்ற சங்கடத்துடன் கூட்டத்திற்கு சென்றேன், அந்தமான் இலக்கிய மன்ற தலைவர் எனற பொறுப்பில்.
தளபதியார் அருமையான, அரசியல் கலப்பு இல்லாத உலகம் பரவிய தமிழர்களின் வாழ்வு பற்றி (எதிர்பாராத வகையில்) மிக நன்றாகப் பேசினார். நிகழ்சிக்குப் பின் விருந்தும் ஏற்பாடாகி இருந்தது.
தனித்தனியாய் அறிமுகங்கள் தொடர்ந்தது.
என் முறை வந்தது; கூட்டத்தில் இலக்கியமன்ற தலைவர் என்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தேன். விருந்தில் மத்திய அரசு அதிகாரி என அறிமுகம் செய்யப்பட்டேன்.
அமர்ந்திருந்தவர், நின்று புகைப்படமெடுக்க உதவினார். ’நீங்கள் அமருங்கள்; நான் நிற்கிறேன்’ என்றேன். ’அது மரியாதை இல்லை’ என மறுத்தார்.
ஒரு மாநில முதல்வரின் புதல்வனாய் இருந்தும் தனக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஒரு அரசுப் பதவிக்கும், மதிப்பும் மரியாதையும் தந்தது வியக்க வைத்தது.
தொடரும் அடுத்த விஐபி சிவ கார்த்திகேயன்