ஔவை நடராசன்
அந்தமானில் ஓர் இலக்கிய விழா. பல தமிழறிஞர்கள் வந்திருந்தனர். அதில் ஔவை நடராசனும் ஒருவர். காலை முதல் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள்; மதிய உணவு, அரங்கத்திலேயே ஏற்பாடானது. இரவு தான், தங்குமிடம் செல்ல முடிந்தது.
நாள்முழுதும் இருந்த நிகழ்வில் சற்றே களைப்பாய் காணப்பட்டார். நடப்பதற்கும் சற்றே சிரமப்பட்டார்; உடன் வந்த அந்தமான் இலக்கியமன்ற நண்பர், அப்துல் ரகுமான் கை கொடுக்க, அவர் கை பிடித்து, நடக்க ஆரம்பித்தார். அப்துல் ரகுமான் ஒரு நகைச்சுவைக் கவிஞர்; சும்மா இருக்காமல், ”உலகமே ஔவையைப் படிச்சி நடக்குது, ஆனா ஔவையே என் கையெப் பிடிச்சி நடக்குது” என்றார். அனைவரும் சிரித்தனர்.
ஔவை நடராசனும் சிரித்து, அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அதோடு நிற்காமல், ”அந்தமானில் இப்படி தமிழ் பேசும் நபர்கள் இருப்பதால், தமிழ் வளரும்” எனவும் ஆசி வழங்கினார்.
தனது உடல் நலத்தை கேலி செய்யச் சொன்ன வார்த்தைகளையும், நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, மகிழந்து, பாராட்டியது வியப்பு தானே?
தொடரும் அடுத்த விஐபி தளபதி ஸ்டாலின்