சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா தனது பட்டிமன்ற ஜாம்பவான்கள் (ராஜா, பாரதி பாஸ்கர்) ஆகியோருடன் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காய் அந்தமான் வந்திருந்தார்.
’நோகாமெ நுங்கு சாப்பிடாம்’ என்ற முடிவில், ’தமிழர் சங்கத்தின் சார்பாக ஒரு விழாவுக்கு நீங்கள் வரணும்’ எனக் கேட்கச் சென்றோம். ‘தனியார் நிகழ்வுக்காய் வந்து, அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவ்வளவாய் நல்லதல்ல…’ எனக் கூறி வர மறுத்தார்.
”பட்டிமன்றத்தில் மட்டும் இரு பக்கமும் ஏற்றுக் கொள்ளும் விதமா தீர்ப்பு கொடுக்கும் நடுவர் நீங்க, கொஞ்சம் நல்ல தீர்ப்பாச் சொல்லுங்க” என்றோம்.
கொஞ்சம் யோசித்தார். உடனே, ”சரி, தமிழர் சங்கத்தின் அழைப்பையும் நிராகரிக்க இயலாது. தனியார் நடத்தும் விழாவுக்கும் எந்த பாதிப்பும் வராமெ ஒரு நிகழ்ச்சி நடத்திட்டாப் போச்சி…” எனத் தீர்ப்பளித்தார்.
மேடை இல்லை; மைக் இல்லை; பொன்னாடை இல்லை; வரவேற்பு பேனர் இல்லை; அழைப்பிதழ் இல்லை; சன்மானமும் இல்லை; இப்படி எதுவும் இன்றி கலந்துரையாடலாக, நாம் கேள்வி கேட்க விருந்தினர்கள் பதில் சொல்வதாய் அமைந்தது அந்த 40 நபர்கள் கலந்து கொண்ட எளிய நிகழ்ச்சி.
உலக அளவில் பெயர் பெற்ற ஒரு பட்டிமன்றக்குழு எப்படி, இப்படி எளிய விழாவுக்கு ஒப்புக் கொண்டது? வியப்பு தான்.
தொடரும் அடுத்த விஐபி லாலு பிரசாத் யாதவ்
காத்திருக்கவும்.