லேனா தமிழ்வாணன்
அந்தமானில் ஒரு சித்திரை விழாவிற்கு லேனா தமிழ்வாணன் அவர்களை சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தோம். இங்கே BSNL தொலைதொடர்பு மட்டுமே இருந்தது. ஆனால் தமிழகத்திலிருந்து வருவோரிடம் அதனைத் தவிர, மற்ற எல்லா சிம் வைத்து ஃபோன் வைத்திருப்பர். அதனால் வருவோர் தனிமைப்பட்டு அவதியுடன் இருப்பர்.

இதனை எதிர்பார்த்து ஒரு ஃபோன், சிம், 2500 ரூபாய்க்கு சார்ஜ் செய்து, ’இதனை அந்தமானில் இருக்கும் வரை பயன் படுத்திக் கொள்ளுங்கள்; 2500 தீர்ந்து விட்டால் சொல்லுங்கள்; ரீசார்ஜ் செய்து தருகிறோம்’ என்றும் தெரிவித்தோம்.
அந்தமான் பயணம் முடிந்து, அவர் புறப்பட்டுச் சென்றார். மறக்காமல் ஃபோன் திருப்பித் தந்தார் நன்றி சொல்லி. பேலென்ஸ் செக் செய்தேன். நாம் தந்த அந்த ரூபாய் 2500 அப்படியே இருந்தது.
சென்னை சென்ற பின் தொடர்பு கொண்டு கேட்டேன், ‘தொலைபேசியினை உபயோகிக்கவே இல்லையா?’
பதில் வந்தது. ”உலகின் பல மூலைகளுக்குச் சென்றுள்ளேன். இந்த ஒரு வசதியினை யாரும் தந்ததில்லை. 2500 ரூபாய்க்கு நிறப்பித் தந்தது உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுது. அதில் நான் ஒரு பைசாவும் செலவு செய்யாமல் இருப்பது தான், நான் உங்களுக்குச் செய்யும் பதில் மரியாதை”
அடெ… இப்படியும் இருக்கிறார்களே! வியப்பாய் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி சாலமன் பாப்பையா
காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூரத்தி.