Dr. வா செ குழந்தைசாமி
சென்னை இலயோலாக் கல்லூரியில் ஒரு தமிழ் மொழி சார்ந்த சர்வதேசக் கருத்தரங்கம். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றேன். பவர்பாய்ண்ட்டில் கொண்டு சென்றதால், புர்ஜெக்டர் & வெண்திரையும் வேண்டும் என அமைப்பாளர்களிடம் கேட்டேன்.
அவரோ, “தமிழ் செமினாருககெல்லாமா புரஜெக்டர் வேண்டிக் கெடக்கு?” என்றார் கிண்டலாக. ”ஏன்..? எல்லாம் செமினார் தானே? அதென்ன தமிழ் செமினார் என்றால் மட்டமா?” சத்தமாய்க் கேட்டேன்.
கருத்தருங்கின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த. ஒருவர் அழைத்தார். ”அமைதியாய் கேளுங்கள்” என்றார். “சார் நீங்க வேறெ… தமிழ் செமினார் என்று மட்டமா பேசுறாய்ங்க சார்..” இது நான்;
”ஓஹோ..அப்படியா?… ஆமா… நீங்க…?”
“நான் அந்தமானிலிருந்து முதன் முறையாக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வந்திருக்கேன்…” பெருமையோடு குறைகுடம், கூத்தாடினேன்.
”அப்படியா மகிழ்ச்சி.” உடன் எழுந்து சென்றார்; சிறிது நேரத்தில் புரஜெக்டர் ஏற்பாடாகி இருந்தது.
”யார் இவர்?” பக்கத்தில் இருந்தவரிடம் விசாரித்தேன். ’Dr. வா செ குழந்தைசாமி (குலோத்துங்கன்)’ என்றார்கள். ”யாரு அவரு?” மீண்டும் ஓர் எதிர்க் கேள்வி.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் வாங்கியவர். சாகித்ய அகாடமி விருதும் பெற்று மூன்று பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராய் இருந்தவர். பொறியியல் & இலக்கியம் இரண்டிலும் சவாரி செய்து ஜெயித்தவர்.
”எப்படி சார்? ”அவரிடமே கேட்டேன் கருத்தரங்க நிறைவின் போது.
”ரொம்ப சுலபம் கிருஷ்ணமூர்த்தி; செய்யும் செயலில் முழு ஈடுபாட்டோடு செய்தால், அதுவே போதும். எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம்”
எளிய விளக்கம், வியப்பின் உச்சம்.

தொடரும் அடுத்த விஐபி நகைச்சுவை நடிகர் செந்தில்