அப்துல் கலாம்.
அந்தமான் தீவுகளுக்கு திரு கலாம் அவர்கள் அரசு முறைப் பயணமாய் வந்திருந்தார். அந்தமான் தமிழ்ர் சங்கம் சார்பில் அவரைச் சந்திக்க கோரிக்கை வைத்திருந்தோம். எந்தப் பதிலும் இல்லை.

மாலை நேரத்தில், ‘இன்னும் அரைமணி நேரத்தில் 10 நபர்கள், 10 நிமிடம் கலாம் ஐயாவைச் சந்திக்கலாம்’ – இப்படி ஒரு தகவல் வந்தது. உடனே அருகில் இருப்போர்க்கு மட்டும் தகவல் சொல்லி விரைந்தோம் ஆளுநர் (விருந்தினர்) மாளிகைக்கு. எட்டு பெரியோர். இரு பள்ளி மாணவர்கள்.
கலாம் ஐயா வந்தார். இரண்டு நிமிடம் ஒதுக்கி அனைவருடனும்
புகைப்படம் எடுத்துக் கொள்ள உதவினார். மீதம் 8 நிமிடங்களை அந்த இரு பள்ளி மானவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார், தனது உள் அறைக்கே அழைத்துச் சென்று.
இந்தத் தலைமுறையினை இந்தக் கலாம் வந்தாலும் திருத்த முடியாது என அவருக்கே தெரிந்திருக்கிறது. எனவே தான் அவர் அடுத்த தலைமுறைக்குக் குறிவைத்தார்.
பின் குறிப்பு: இரு மாணவர்களில் ஒருவன் என் மகன்.
தொடரும் அடுத்த விஐபி லேனா தமிழ்வாணன்.
காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூரத்தி