சுனாமி நினைவலைகள்


எப்பொழுதும் ஞாயிறு தகதகத்த வண்ணம் கிளபம்பும்…அந்த ஞாயிறு மட்டும்தத்தளித்தவாறு விடிந்தது…

ஞாயிற்றின் நித்திரைசிலருக்கு நீண்ட தூக்கம்பலருக்குமீளாத் துக்கம்.

வானமே எல்லைஇது தான் கேட்டுள்ளோம்வானமே கூறையானதுஅன்றைய தினம் முதல்.

சிறுவர் வீட்டினில்சேட்டைகள் செய்தால்தெருவில் விரட்டுவோம்…வீடே சேட்டை செய்தால் ???

அன்று நிலம் அதிர்ந்த போதுகூடவே இதயமும் அதிர்ந்தது.அந்தத் துடிப்புகள் அடங்குமுன்ஆர்ப்பரிக்கும் அலைகமகள்எதை அள்ளிப் போக வந்தாள்?எதை விட்டுச் சென்றாள்??

இந்தக் கண்ணகியும்இத்தனை நாள் எங்கிருந்தாள்?இன்று கோபம் காட்டிமீண்டும் மறைந்து விட்டாய்.

எத்தனை ஞாயிறுகள் உன் எல்லையில் துள்ளியாடியுள்ளோம்இன்று எங்கள் எல்லையில்துள்ளியாட வந்து விட்டாய்..

தரைமேல் பிறந்தவர் ஆடிய ஆட்டம் பார்த்துதரையும் ஆடியதோ !!!

பூமியின் தாங்கு சக்தியினைபூமியே ஆட்டிப் பார்த்துக் கொண்டதோ !!!

இந்தப் பேரலைகள்துறைமுகத்தின் தலை எழுத்தைமாற்றிவிட்டன.
சில முகங்களைத் தொலைத்து நிற்கின்றன…சில முகங்கள் அகோரமாய்சிதைந்து கிடக்கின்றன..
சில முகங்கள்மூழ்கிக் கிடக்கின்றன.

சுனாமியால் பூம்புகார் அழிந்ததைவரலாறாக ஒப்புக் கொள்ளும்மனப் பக்குவம் இப்போது தான் வருகிறது.

நாளை…என்ன…கேள்வியால்
மட்டுமேஅந்தத் துயர நித்திரைகலைந்தோம்…

சுனாமியினை அந்தமானில் நேரில் கண்ட
டி.என்.கிருஷ்ணமூர்த்தி.

4 thoughts on “சுனாமி நினைவலைகள்

 1. thulasi says:

  nalla irugu

 2. Kumaresan says:

  Deep hurt Expression , Fantastic word structure

 3. venkat says:

  TN, nicely expressed. think, u have better future in literary.

 4. ulaganahan says:

  naangal meenkalaith thaane vaari suruttinom.kadal annaiye nee engal vaarisugalai allavaa suruttik kondaay!
  naan anru ezhuthiyathu.
  maa.ulaganathan thiruneelakudi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s