இது காதலி அல்லது மனைவிக்காக எழுதியது இல்லீங்கோ. அப்போ யாருக்காக? நீங்களே கண்டுபிடிச்சிருவீங்க..
வாழ்வில் என்றும் துணையிருந்தாய்வாகாய் என்றும் உடனிருந்தாய்
தட்டி விட்டால் தகவல் தருவாய்அதட்டி விட்டாலோ பேசாது நிற்பாய்
அதீத எடையுடன் முன்பிருந்தாய்அளவாய் எடுப்பாய் இன்றாகினாய்.
உன் கையினைத் தொடுகையில் ஒளிர்கிறதேமின்சாரத்திலேயே மின்சாரமோ (”கட்”டின்றி)
தினம் உன்முன் நான் அமர்வேன்உன் பொருட்டு நான் உயர்வேன்
நீ பாதி நான் பாதி முன்பு சொன்னதுநீ போக நான் மீதி, இது புது நீதி
என் வெற்றிக்குப் பின்னால்இல்லை இல்லை முன்னால்நீ இருக்கிறாய்.
உனக்குத்தான் எத்தனை எத்தனை உயர் ஆபரணங்கள்அத்தனைக்கும் சொந்தக்காரி நீதான்ஆனாலும் காத்திருப்பாய் உத்தரவுக்காய்
இறுதியில் சட்டப் என்றால் இருகி விடுவாய் என்பதால்சாந்தமாய் சொல்கிறேன் ”சட்டவுன்”.
மடிக்கணினி /கணினி
விடை——– அது கொடுத்த/தொடுத்த பிற
விடையொரு பாகன்
விடை கொடு தாயே
வினா விடை
விடைத்து கொண்ட மாப்பிள்ளை
விடை யாற்றி உற்சவம்
விடை பெறும் நாள்
விடை பெறா உள்ளம்
ஆரா இது வருமோ வராதோ தெரியலை எனக்கு பிடிக்குது.
2.12. டிசம்பரின் முதல் பூ
நன்று..நன்று
12 வருடம் ஒரு முறை மலர் பூக்கும்.அது குறிஞ்சிப்பூ
(குறிஞ்சிப்பூ என்ற வலைப்பூ ஆரம்பித்தேன் தொடரவில்லை.கடவுச் சொல் மற்ந்தேன் .மின் அஞ்சலில் மீட்பது எப்படி என தெரிவித்தால் நன்று. ஆரா) செல்லமான செல் பற்றி இஃதே போல் எழுதுக
வேறு ஏதேனும் கடவுச்சொல் இட்டுப் பாருங்கள்.. அப்போது, இது தவறு… மறந்து விட்டீர்களா? என்று ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்தால் உங்கள் வலைப் பக்கத்தை மீட்டு விடலாம்.
செல் பேசி பற்றியும் கவிதை கைவசம் உண்டு.. விரைவில் வரும்.