மொபைல், இன்டர்நெட், இமெயில் எல்லாம் வராத காலத்தில் நம்மை ஒன்று சேர்த்த பெருமை தபால் துறைக்குத் தான் சேரும். கோவையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மதியம் சாப்பாடு மெஸ்ஸில் கட்டு கட்டு என்று செமையாய் கட்டி விட்டு, எல்லாரும் மறுபடியும் வகுப்புக்கே போக, நான் மட்டும் ஹாஸ்டல் ரூமுக்கு போவேன். கதவைத் திறந்து பார்த்தால் கீழே விழுந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்தாலே பரவசமாய் இருக்கும். (உள்ளே Draft இருக்கும் கடிதங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்)
கடிதங்கள் இப்போது அப்போதைய மவுசை இழந்து இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்தமானுக்கு வந்த புதிதில் கிரேட் நிகோபார் தீவில் தான் பணி. அது கன்னியாகுமரியை விட தெற்கே உள்ள இந்தியப் பகுதி.. (சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) அப்போதெல்லாம் போட்டி போட்டு (இப்போது பிளாக்கில் எழுதுவது மாதிரி) எழுதுவோம். 64 பக்கங்களுக்கு எல்லாம் கடிதம் வந்துள்ளது.
பாலகுமாரன் நாவல் மூலம் அறிமுகமான ஒரு நண்பிக்கு அதிகம் கடிதம் எழுதி இருக்கிறேன். பெண்கள் புத்திசாலிகள் என்பதை பாலசந்தர் படமும் பாலகுமாரன் நாவல்களும் தான் காட்டும் என்பதில்லை. பாலகுமாரன் ரசிகைகளும் அதில் அடக்கம். கலயாணத்திற்கு பெண் பார்த்து வந்த பிறகு வழிந்து வழிந்து காதல்(????) கடிதம் எழுதியதை இப்பொ நெனைச்சா சிரிப்பா இருக்கு. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று பாலகுமாரன் மாதிரியே கேட்டு சமாளிக்க வேண்டியது தான்.
அந்தக் காலத்தில் கடிதம் என்பது ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரமா இருந்திருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத ஒரு சாதனமாய் இருந்திருக்கும். அதனாலெ தான் தூது சொல்லும் வழக்கம் தோதாக வைத்திருப்பார்கள் என்பது என் ஊகம். அதுக்கு வண்டைக்கூட நம்ம ஆட்கள் விட்டு வைக்கலையே..!!! வண்டா?? என்ன இது வம்பா இருக்கே என்கிறீர்களா?? திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) பாடி, நக்கீரரிடம் உதை வாங்காமல் வரும் பாட்டு தான் அது. தும்பி விடும் தூது அது.
திருவாசகத்தில் நம்ம மானிக்கவாசகர் என்ன செய்றார் தெரியுமா? இந்த மாதிரி சாதாரண தும்பி எல்லாம் கதை ஆவாது என்கிறார். ஆமா மத்த ஆளுங்க காதலிக்கு தூது விடுவாங்க.. இந்த மா வாசகரோ இந்த காதலிகளைப் படைத்த ஆண்டனுக்கே தூது போகச் சொல்றார். (அவங்க ஆத்தாளுக்கு தாவனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என்ற டயலாக் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்குது). துளியீண்டு தேன் இருக்கிற பூவை எல்லாம் ஏம்ப்பா கொஞ்சுறீங்க… நினைக்கும் போதும், பாக்கும் போதும் பேசும் போதும் ஆனந்த தேன் தரும் சிவபெருமானின் பாதமலரைப் போய் கொஞ்ச்சுங்கப்பா..கோதும்பிகளா என்கிறார். (கோ – அரசன் என்று பொருள் கொள்க. ஓஹோ கோ பட்த்தோட அரத்தம் இதானா??)
கம்பர் இங்கே உதயமாகிறார்.
“என்ன கிருஷ்… இப்பொ என்னையெ கலட்டி விட்டு மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கே??”. அதெல்லாம் இல்லை ஐயனே… நீங்க இந்த கால டைரக்டர் ரவிகுமார் மாதிரி..கடைசிலெ தான் வருவீங்க.. கொஞ்சம் பொறுங்க… உங்களை அப்புறமா கவனிக்கிறேன். கம்பர் மறைந்து விட்டார்.
இந்த தூது விடும் நம்ம பழைய ஆட்கள் எல்லாம், ஏன் மரம், மட்டை, குளம், குட்டை, நிலா, தென்றல், அலை, மேகம் என்று தூது விட்டார்கள்?. ஆட்களை நம்ப முடியுமா என்ன? அர்விந்தசாமி மாதிரியான Handsom ஆட்கள் தாடி வைத்த பிரபுதேவா மாதிரி ஆட்களை தூது போகச் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சி? தூது போறேன் தூது போறேன் என்று சொல்லி தோது பன்ன கதை எல்லாம் இப்பவே இருக்கே?? அப்பொ நம்ம ஆட்கள் நல்லா யோசிச்சு தான் செஞ்ச்சிருப்பாங்களோ.. இருக்கும்..
தூது போகும் ஆளை “ஒழுங்கு மரியாதையா சேதி சேக்கலே..தெரியும் சேதி” என்று மிரட்டலாம். ஆனா ஆறு மேல் கோபமாய் மிரட்டிய சேதி தெரியுமா?? Mr கம்பரே… இப்பொ உங்களை வரவழைச்சிட்டேன். சந்தோஷம் தானே..??
அனுமன் சீதையிடம் விலாவாரியாக (அப்படி என்றால் என்ன அரத்தம் என்று தெரியலை) சொல்லும் இடம். இராமன் சீதையின்றி சோகத்தில் தவிப்பதை ஆதாரத்தோடு சொல்லும் சிரமமான வேலை அனுமனுக்கு. சொல்கிறார். “ கோதாவரி ஆறைப் பாத்து, தினமும் சூரியன் உதயமாகும் போது இங்கே குளித்த்து உண்மையென்றால் நீயே அவளைத் தேடிக் கண்டுபிடித்து விடு. இல்லையென்றால் அம்பு விட்டு ஆறை அனலாக மாற்றி விடுவேன்” என்றெல்லாம் வருந்தினார் என்கிறார் அனுமன்.
போது ஆயினபோது உன தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா பவளக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! என்னா
கோதாவரியைச் சினம் கொண்டவன் கொண்டல் ஒப்பான்.
உங்களுக்கு இப்படி யார் மேலாவது கோபம் வந்திருக்கா?
//(சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) // please more details..
This is not in Tamil font. Uncipherable.
அன்பு நண்பரே –தூது…செல்ல ஒரு தோழி இல்லையே —
அவன் :கடிதத்தில் தூது விட்டால் காலம் ஆகுமுண்ணு,காற்றால் தூது விட்டென்.
அவள்:தென்றலாய் வந்துச்சு.தேனாய் இனித்தது.
மின் கடிதம் தூது விட்டால்
மின் சக்தி போல் உணர்ந்தேன்
விழியால் தூதுவிட்டால் விரைவாக செல்லாதோ ?
எஸ் எம் எஸ் தூதுக்கள் ஏராளம் தாராளம்.
(கம்பர் உதயம்)அனுமன் தூது அருமை அய்யா.கோதாவரி தூது சான்றோரின் தூது.சான்றோர் எனக்கிடந்த கோதாவரி.
நீளமாய் வேண்டாம்.கனடா முத்துலிங்கம் கட்டுரை செப்டம்பர் -உயிர்மை படிக்க.நல்ல பகடி. பின்னும் வருவேன்.அன்பு ஆரா
நண்பரே படப்பாட்டு நினைவுக்கு வந்தது.
தோழா தோழா தோள் கொடு தோழா–
என்னுயுர் தோழி கதாநாயகி—-
தோள் கொடுப்பேன் என்னுடுடைய ராஜத்திக்கு
தூது செல்ல ஒரு தோழி–
பாட்டுக்குப் பாட்டெடுத்து -தூது செல்ல சந்திரனே நீ ஓடிப்போய் சொல்லி விடு–(சரியா)
தூது வந்திச்சா வந்திச்சா —
வேறு–பாரதி எட்டயபுர மன்னருக்கு சீட்டுத்தூது
தூது கண்ணன் போய் மாற்றிப் போட்ட மஹாபாரதம்
செல்போன் தூது மிஸ்டு காலாக பரிணாம வளர்ச்சி
கண்ணீர் தூது காதலனுக்கு
பன்னீர் தூது திருமணத்தில்
தூதரக உறவு முறியும் விக்கிலீஸ் அடைக்கலம் விவகாரம்
தூது பல நல்ல/வில்லங்க முடிவுகளில் முடிகிறது.(வீரபாகு தூது சிவாஜி மறக்க முடியுமா ?)தூள் கிளப்புங்க-கிளம்பிட்டாங்கய்யா கிள்ம்பிட்டாங்க–போதும் என்ற மனம் பொன் செயும் -நிறைவு.ஆரா..பின் /நாளையும்.இன்று போய் நாளை வருகிறேன் (அட கம்பர் ?)
நன்கு ரசித்து… பாட்டுக்கு பாட்டும் போட்டுள்ளீர்கள். நன்றி