தங்கத் தாமரை மகளே…


நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வரும் பொருட்களை ஒரு பட்டியல் போட்டால் அதில் தங்கம் நிச்சயமாக இருக்கும். “முழம் ஏற.. ஜான் சறுக்க..” என்கிற மாதிரி அப்பப்பொ இறங்கு முகமும் காட்டி விளையாடும். ஆனா இந்த சொக்கத் தங்கம் நம் மக்களிடையே இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராலும் எதிர் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு எங்கும் எதிலும் தங்கம் பொன் இப்படி இருக்கிறது.

தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே.. இப்படி ஒரு கற்பனை ஓடுது ஒரு கவிஞருக்கு… ஒலிம்பிக்கிலெ தங்கம் கிடைக்கலையே என்று நொந்து கிடக்கும் போது அந்த பதக்கத்தின் மேல் ஒரு முத்தும் பதித்த மாதிரி ஒரு காதலி.. ஆஹா..இது போதாது?? எனக்கு ஒரு ஐடியா தோன்றது. இந்த மானாட மயிலாட மாதிரி எல்லா சேனல்லெயும் ஆட்டம் என்கிற பெயரில் செமெ ஜிம்னாஸ்டிக் வித்தைகள் செய்யிறாங்க.. பேசாமெ அவங்க எல்லாரையும் நல்லா டிரைன் பன்னி, தங்கம் வாங்க டிரை செய்யலாமே..( ஒரு தங்கம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு??)

என் எஸ் கிருஷ்ணன் & மதுரம் நடித்து பாடிய ஒரு சூப்பர் ஹிட் பழைய காமெடி பாடல் இருக்கு. நல்ல தம்பி தான் படத்தோட பேரு என்று நினைக்கிறேன். தங்கமே என்று அழைத்து.. வாரி அணைக்க பாடுவார். நாயகி தன்னை பாடுவதாய் நினைத்து கோபிக்க… அட… ஒன்னெ இல்லைம்மா… கொஞ்சம் கொஞ்ச்சமா காசு சேத்து செம்பு, பித்தளை, வரை வந்தாச்சி… தங்கம் தான்…என்று இழுப்பார்.. அன்று தொடங்கிய இழுப்பு இன்று வரை தொடர்கிறது.

பெரிய திரையில் இந்த தங்கம் வைத்து படத்தின் பெயரும் பாட்டும் அந்தக் காலம் முதலே பிரபல்யம் ஆக ஆரம்பித்து விட்டது. தங்கத் தோணியிலே தவழத்துடிக்கும் காதலன், தங்கத்தில் முகம் எடுத்து காதலியின் பிரதியை விதம் விதமாய் மாற்றத்துடிக்கும் காதலன், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை இருக்குமா என்று கேட்கும் ஜோடி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தங்கமலை ரகசியம், தங்கப் பதக்கம், எங்கள் தங்க ராஜா, எங்கள் தங்கம், தங்கச் சுரங்கம், பொன்னூஞ்சல் இப்படி பல ஹிட் தந்த தங்கப் படங்கள்.

கவிஞர்களுக்கும் என்னவோ பொன் பெண் இரண்டையும் இணைத்துப் பாடுவதில் ஓர் அலாதி இன்பம் தான். பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..என்று வரும் பாட்டு சாகாவரம் பெற்ற பாடல். இதேபோல் பொன்நகை புன்னகை என்பதையௌம் அவர்கள் விட்டு வைத்த்தில்லை. பொன்னகை அணிந்த மாளிகைகள்… புன்னகை மறந்த மண்குடிசை..பட்டம் போல் அவர் பளபளப்பார்.. நூல் போலே இவர் இளைத்திருப்பார் என்று ஏற்றத்தாழ்வுகள் பற்றி வந்த அழகான சோகமான பாடல் அது.

தங்கள் குடும்பத்தையே வேண்டாம் என்று வெறுத்து (நொந்து நூலாகிப் போய்) வீட்டை விட்டு வெளியேறிய சித்தர்களுக்கு இரும்பை தங்கம் ஆகும் வித்தை தெரிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. பிறக்கும் போதே எல்லாரும் குவா குவா என்று தான் அழுதிருப்போம். ஒரு குழந்தை மட்டும் சிவா சிவா என்று அழுதபடியே பிறந்ததாம். அந்தக் குழந்தைக்கு சிவ வாக்கியர் என்றே பெயர் வைத்தனர். அவர் ஒரு முறை காட்டில் ஒரு மூங்கிலை வெட்ட… அப்படியே தங்கம் வந்து விழுந்ததாம்.. (கோலார் தங்க வயலுக்கு பக்கத்தில் அந்தக் காடு இருந்திருக்குமோ).. அந்த சித்தரோ, ஐய்யோ..எமன்..எமன் என்று ஓடி வந்துட்டாராம்.. (அது நான்கு பேரின் உயிர் வாங்கியது தனிக்கதை)

திருமதி சிவவாக்கியரிடம் கொங்கணச் சித்தர் என்பவர் வந்தாராம்..(சிவ வாக்கியாரின் குருவே, உனக்கு இல்லற ஆசை இருக்கு… கல்யாணம் செய்திட்டு அப்புறம் துறவறம் வரலாம் போ..என்று விரட்டியது இன்னோர் கிளைக்கதை) வெறும் மணலை அள்ளிக் கொடுத்து சாப்பாடு தயார் செய் என்றாராம். அவரும் மணலை அரிசி களைவது போல் செய்து உலையில் வைக்க சாதம் வந்ததாம். அரண்டு போன அந்த சித்தரும் ரெண்ட் இரும்பு துண்டை எடுத்து தங்கம் ஆக்கித் தந்தாராம். அதையும் நம்ம சிவ் வாக்கியார் தூக்கி கெணத்தில் தூக்கி எறிஞ்சாராம்.. எப்படி கீது??

ஆக இரும்பை தங்கமாக்கும் வித்தை நம்ம சித்தர்களுக்கு தெரிஞ்சிருக்கு என்பது அரசல் புரசலா தெரியுது.. அது உண்மையா?? ஏதாவது ஒரு Resource Person ஐப் பிடித்து கேட்டா என்ன?? எனக்கு ரொம்ப பரிச்சயமான ஒரே ஒரு அளு… அதுவும் கூப்பிடு தொலைவில் இருக்கிறவர் திருவாளர் கம்பர் தான். அவரைக் கேட்டேன்.. அவர் ஒரு பாட்டை refer செய்தார். பாப்பைய்யா ரேஞ்ஜிலெ இல்லாட்டியும் சுமாரா புரிஞ்சதை உங்களுக்கு சொல்றேனே…

மின்னலடிகும் சூப்பர் வெண்மை என்பார்களே..அதுபோல உடலின் நிறம் உடையவர் சீதை. ஏ கிளாஸ் ஜெயிலில் இருப்பதால் நகைகள் அணிய அனுமதி இருக்கிறது (இருக்கும் இடமோ அசோகவனம்). இராமன் மோதிரம் கைக்கு வந்ததுமே சீதையின் உடல் பொன்னிறம் ஆயிடுத்தாம். கம்பருக்கு ஆச்சர்யம் ஒரு வேளை அந்த உடம்மபையும் தங்கமாக்கும் Chemicals ஏதும் செய்து அனுப்பி இருப்பாரோ ராமன்?? ஆச்சரியம் கம்பருக்கு மட்டும் இல்லை. நமக்கும் தான்.

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறமே மெய்யே
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிக்கொல்லோ

தங்கம் இப்பொ விக்கிற வெலையிலெ இப்படி ஏதாவது குறுக்கு வழியில் தங்கம் செய்தால் தான் உண்டு.. என்ன சொல்றீங்க நீங்க??

11 thoughts on “தங்கத் தாமரை மகளே…

  1. Kesava Raja says:

    Dha Song lyric is Thanga Thaamarai magale

  2. Vontivillu Chittanandam, Chnnai says:

    Well written. Keep it up.

  3. ஆரா எனும் ஆனந்தராஜன் chennai says:

    மின்னுவதெல்லாம் பொன்னாகுமா ? பொன் மேனி உருகுதே
    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில்குறைவதுண்டோ ? சித்தரிப்பு அருமை .சித்திரத்து மலர்ந்த செந்தாமரை சீதை என்பர்.அளு அல்ல ஆளு என்றல்லவா பிழை நேர்த்தி செய்க. கம்பர் ஊர் தேரெழுந்தூர்
    அண்ணவர்க்கே சரண் நாங்களே.
    உம்மை நிழற் கம்பரே என்று கூப்பிடலாமா ? அந்தமான் செய்த அழகு ..ரகுமான் பிடித்த கதை சொல்லில் செதுக்கி சுவை மேல் அதிகம் ஆக்குகின்றீர்கள்( ரகு மான் ராமன் பிடித்த/பிடிக்காத பொன் மாய மான் அட இங்கேயும் -பொன்- தான் ) உம் வசிப்பிடம் அந்த மான் தீவல்லவா
    நீளப் போகிறது மீண்டும் எழுதுவேன் ஆரா

  4. ஆரா சென்னை says:

    நன்றிக்கு நண்பரே /வெற்றி உமை அடைய வாழ்த்து.கடிதம் மின் அஞ்சலில் தனியே காண்க. ஆரா

  5. Thank you for bringing Kambar often in this group. I appreciate how nicely you draft an article and introduce Kambar in that context! Please do write many more views. v.k. janardhanan

    • Tamil Nenjan says:

      It was not a planned one when I started writting in Blog. But later it became a trend. With support like u I am continuing.

      • Tamil is a treasure trove and whoever touched it, will not come out of it.There are several exponents, whose discourses will make us to another world – Those who know Tamil are in my humble opinion , gifted. Please continue your writing, with best wishes, v.k. janardhanan.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s