Three in One


எனக்கு என்னமோ இந்த MFD – அதாங்க அந்த Multi Functional Devise மேல் அவ்வளவு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆரம்பகாலத்தில் Printer, Scanner, Copier வந்து சொற்ப காலத்தில் சொதப்பிவிட, தனித்தனியே இருப்பது தான் நல்லது… என்பது தான் நல்லதாய்ப் பட்டது. இந்த Galaxy Tab கையில் வந்த பிறகு, நான் அதையே ஒரு MFD மாதிரி தான் வைத்திருக்கிறேன். போன், இன்டர்நெட், டிஜிடல் போட்டோ எடுக்க, வீடியோ எடுத்து விளாச, சொடொகூ வெளாட, டயமர், ஆடியோ ரெக்கார்டிங்… இப்படி ஏகமாய் செய்தாலும், கையடக்கமா இல்லையே என்பது பலரின் குற்றச்சாட்டு. மாஞ்ஜி மாஞ்ஜி செஸ் ஆடும் என் பையன் மட்டும் சைஜ் ஓகே தான் என்கிறான். அவரவர் பார்வை.

ஆனால் குத்தம் சொல்லவே முடியாத இன்னொரு Multi Functional நபர் அவரவர் மனைவிமார்கள் தான் (ஒத்துக்குவீங்க தானே – சில உங்களுக்கு பிடித்த functions – பல உங்களுக்கு பிடிக்காத functions . என்ன நான் சொல்றது சரி தானே?). சரி நம்ம வேறு பலவிதமான செய்திகளை திரீ இன் ஒண் மாதிரி பாக்கலாமே கொஞ்சம்..

Function 1:

மாதங்களில் நான் மார்கழி. இது கண்ணன் சொன்னது. மதங்களில் எனக்குப் பிடித்தது தாமதம். இது கண்ணதாசன் சொன்னது. கிழமைகளில் எனக்குப் பிடித்தது செவ்வாய். செவ்வாயை வெறும் வாய் என்று ஒதுக்குவர் பலர். சிவந்த செவ் வாய் எப்படி வெறும் வாய் ஆகிவிட முடியும்? இப்போது உங்க எல்லாருக்கும் கூட செவ்வாய் பிடிக்க ஆரம்பிருத்திருக்குமே??

உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுதல் என்பது சில வருடங்களுக்கு முன்னர் வரை சென்சாரின் கத்தரிக்கோலுக்கு பலியாகி வந்தது. தற்போது கதைக்கு அது மிகவும் அவசியம் என்று கருதியும்(??) அதனால் சமூகத்திற்கு எந்தக் கேடும் இல்லை என்ற காரணத்தினாலோ என்னவோ, அது அனுமதிக்கப் பட்டு வருகின்றது. ஆனால் ஆங்கிலப் படங்கள் தமிழாக்கம் செய்து சின்னத்திரைக்கு வரும் போது, இந்த முத்தக் காட்சிகள் இடம் பெறுவது தவிர்க்க இயலாது போகின்றது.
ஆப்பிள் பெண்ணே நீதானே… என்று காதலியை ஆப்பிளாக நினைப்பது, பார்த்து ரசிக்க மட்டுமா?? (அந்த ஆப்பிளும் பள பளப்பாய் இருக்க என்ன என்ன மெழுகு போட்டிருக்கோ? யாருக்குத் தெரியும்??) அப்பொ உதடுகள் மட்டும் எப்படித் தெரியும் அந்தக் காதலனுக்கு??

பாவையின் இதழைக் கண்டால் கும்குமச் சிமிழ் தெரியுதாம். (ஏன்.. லிப்ஸ்டிக் ஓவரா இருகுமோ??). செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் என்று ஒருவன் காதலியிடம் அப்ளிகேஷன் போடுகிறான். ஒன்று மட்டும் உறுதி.. வாய் சுவையானது. செவ்வாய் அதைவிடச் சுவையானது. இதை மட்டும் சொல்லிட்டு அடுத்த கட்டத்துக்கு தாவலாம்.

Function 2:

மிகப்பெரிய கலவரங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை சற்றே உத்து நோக்கினால், (அதை ஏன் உத்து பாக்கனும்??) சில தெளிவான உண்மைகள் வெளிவரும். நெஞ்சை ரணமாக்கிய வார்த்தைகள் அதன் மூல காரணமாய் இருக்கும். அதுவும், “என்னைப் பாத்து எப்படி அப்படி சொல்லப் போச்சி?? அதுவும் நாலு பேத்த்துக்கு மத்தியிலெ..” இந்த டயலாக்கும் கட்டாயம் இடம் பெறும் அந்த காரணபுராணத்தில்.
இதில் அந்த நாலு பேத்துக்கு முன்னாடி என்பதினை அடிக்கோடிட வேண்டும். சின்னக் குழந்தை தடுக்கி விழும். பெரியவர்கள் வழுக்கி விழுவர். யாரும் அதை பார்க்கவில்லையா?? அது சாதாரனமான செயல். அதையே நாலு பேர் பாத்து சிரிச்சிட்டா???… குழந்தையோ அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். வளர்ந்தவர்களோ ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் அழுவார்கள் மனசிலெ..

உளவியல் தத்துவம் போதிக்கிறது: ஒருவரை பாராட்ட வேண்டுமா?? நாலு பேருக்கு முன்னாடி பாராட்டு. திட்ட வேண்டுமா? தனியே திட்டு. ஆனா இந்த பாழாப்போன மனசு இருக்கே.. அது என்ன செய்யுது?? திட்டனுமா?? நாலு பேருக்கு முன்னாடி… அப்பத்தான் சுள்ளுன்னு உரைக்குமாம்… பாராட்டையும் ரகசியமா அவனை மட்டும் கூப்பிட்டு சொல்லச் சொல்லுது. என்ன செய்ய??

ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர் என்று யாரோ சொல்லி வச்சிட்டாய்ங்க. ஆனா கண்டிக்கும் உரிமை மட்டும் ஆசிரிய பெற்றோருக்கு நாம தரலையே.. ஆனா பாராட்டலையே என்று ஏங்கவும் தான் செய்றோம். ஏனென்றால் ஒன்றோ, இரண்டோ என்று மட்டும் இருக்கும் குழந்தைகளோடு நாம் இருக்கும் (செலவளிக்கும் என்று சொல்வது நல்லாவா இருக்கு?) நேரமோ குறைவு. அதில் கண்டிக்க ஏது சமயம்?. ஆக நாமே செய்யாத ஒன்றை ஆசிரியர் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்?

ஆனால் ஆசிரியரின் திட்டுக்கள் உங்களை கூர்மையாக்கும் முயற்சி தானே.. திட்ட திட்ட திண்டுக்கல். வைய வைய வைரக்கல் என்று ஜாலியா அதை பாசிட்டிவ்வாத் தானே எடுத்துக்கனும். நிலைமை என்ன? திட்டு வாங்கிய மாணவி தற்கொலை வரை போகிறார். அல்லது கண்டித்த ஆசிரியையை கொலை செய்யும் அளவுக்கே போகும் மாணவன்.

கண்டிப்புகள் கூட நம்மை வளர வைக்க உதவிடும் கருவிதான் என்பதை பசங்களுக்கு நாம வீட்டிலெ கத்துக் கொடுக்க மறந்திட்டொமோ ?…
அப்படியே அடுத்த டாபிக் .. .

Function 3:

தானா நடக்கும் ஒரு சங்கதியை, ஏதோ நமக்காகத் தான் நடக்கிற மாதிரி நெனைக்கிறது நம்ம மனித இயல்பு. சந்தோஷமான நேரத்தில் மழை பெய்தால், அடடா.. வானம் கூட வாழ்த்து சொல்கிறதே என்று சந்தோஷிப்பான். அதே சமயம் ஒரு சோகமான சூழலில் மழை பெய்தால், அடடே.. இந்த வானமும் நம்மோடு சேர்ந்து அழுகுதே!! என்று கூட கொஞ்சம் ஒப்பாரிக்கு வக்காலத்து வாங்குவோம். (புருடா என்று அழகு தமிழில் சொல்லலாம்);

இந்த நிலவை வச்சி அந்தக் காலத்து கவிஞர்களும் சரி… இந்தக் கால கவியரசர்களும் சரி, விளையாட மறந்ததில்லை. சோகமா இருந்தால், நிலவே என்னிடம் நெருங்காதே என்று பாடுவர். ஜாலியான மூடில் வான் நிலா நிலாவே அல்ல.. அட..உன் வாலிபம் நிலா என்று குதூகலிப்பர். நிலாவை கையிலும் பிடிப்பர். நிலவை சாட்சி சொல்லவும் அழைப்பர். (அமாவாசை வந்தால் கவிஞர்களுக்கு லீவு விட்ருவாங்களோ!!!)

MFD :-

சரி.. இப்பொ நம்ம சங்கதிக்கு வருவோம். மேலே சொன்ன மூனு சமாச்சாரத்தையும் ஒண்ணா சேத்து கம்பர் படைத்த பாடல் தான் நான் சொல்ல வந்தது. அங்கும் நிலவு வருகிறது.. இல்லை..இல்லை..மறைகிறது. அது கம்பர் கண்ணுக்கு எப்படி தெரியுது தெரியுமா?? (சொன்னாத்தானே தெரியும்?)

“அடேய் நிலவே, அழகிய கொவ்வைக் கனி மாதிரி வாயை வச்சிருக்கும் சீதையெ பாக்கிறச்சே, என்னை சுட்டாயே… ஒரு சாதா கொரங்கு (அப்பொ என்ன ஸ்பெஷல் தோசை மாதிரி மசாலா கொரங்கா வரும்?) என்னோட எனிமிகளான தேவர்கள் முன்னாடி அலம்பல் செய்றதை சும்மா வேடிக்கை பாத்தி இல்லெ???” – இப்படி இராவணன் கோவிச்சுக்குவானோ என்று பயந்து போய் யாரு மறைஞ்சா?? நம்ம நட்சத்திரங்களுக்கு எல்லாம் கேப்டனான நிலாவாம். எப்படி ஜாலியா இருக்கா? படிக்க…

அப்படியே அந்தப் பாட்டும் படிச்சிருங்க..

தொண்டை அம்கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்
விண்ட வானவர் கண்முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய் என்றுகாணுமேல் அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான்போல் ஒளித்தனன் உடுவின் கோமன்.

அந்தமானில் மூன்று மரங்கள் பின்னிப் பினைந்து Three in One ஆக இருக்கிறது. அதன் கீழ் நம்மாளுக முனியசாமி கோவில் உருவாக்கிட்டாய்ங்கப்பா…

அப்புறம் வேற ஏதாவது மேட்டர் சிக்குதான்னு பாப்போம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s