கருப்பு வெள்ளை படங்களில் இல்லாத ஒரு கலாச்சாரம் கலர்ப் படங்களில் வந்துள்ளதை நீங்க கவனிச்சிருப்பீங்க..
நான் சொல்ல வந்தது உடம்பு பூரா சேறு பூசிக்கொள்ளும் கலை. நகைச்சுவைக் காட்சியாகட்டும் அல்லது சண்டைக்காட்சி யாகட்டும் இந்த சேற்றுப் பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்று.
குளம் குட்டைகளை பார்த்தே இராத நகரங்களில் ஆரம்பிக்கும் சண்டையும் சரி… ஆஸ்திரேலியாவில் போடும் சண்டையே ஆகட்டும்.. அது முடியும் இடம் சேறு தான்.
அதிலும் சேற்றில் விழும் போதும் சரி, அதன் பின்னர் கொஞ்ச நேரமும் சரி, ஸ்லோ மோஷனில் காட்டியே ஆக வேண்டும் என்பது சினிமா இலக்கண விதி போலும்.
இந்த “உடம்பு முழுக்க” பிரச்சினையை வச்சிகிட்டு நாம கொஞ்சம் பிளாஷ்பேக் போலாமா..??
என்னது யாரோ தேம்பி தேம்மி அழுவுறாங்களே… யாருப்பா அது? ஏன் இப்படி அழுவுறாரு அந்த மனுஷன்?
பக்கத்தில் இருந்த ஒரு ஆளைக் கேட்டோம்…
“அந்த ஆளு ஏதோ ஊழல் பன்னிட்டாராம். ஆனாலும் அவருக்கு ஏதோ அவார்ட் கெடைசிரிச்சாம்… அதான் என்ன செய்றதுன்னு தெரியாம அழுதுகிட்டு கிடக்கிறார்.”
என்னது… ஊழல் பன்னிட்டு அழும் மனுஷனா? இது என்ன புதுக்கதை?? ஆமா.. என்ன ஊழல்..?
“ஆயுத ஊழல்..”
ஆர்வம் மேலிட கொஞ்சம் விசாரிச்சோம்..
“எல்லாரும் கோவில் பணத்தை எடுத்து குதிரையில விடுவாங்க.. இந்த மனுஷன் படைக்காக குதிரை வாங்க வச்சிருந்த பணத்தை எடுத்து கோவில் கட்டிய முதல் ஆயுத ஊழல் பேர்வழி.. அப்படிப்பட்ட தனக்கு இறைவன் அருள் செஞ்சிட்டாரம்.. அதான் புலம்பல்.”
நல்ல சேதிதானே… ஏன் புலம்பனும் ?? என்னதான் வேணுமாம் அவருக்கு??
புலம்பலை ஒட்டுக் கேப்போமா??
(ஒட்டுக்க்கேக்கிறதே தப்பு. அதிலும் புலம்பலை ஒட்டுக் கேக்கிறது ரொம்ப தப்பு…. அது சும்மா… உங்களுக்குச் சொல்லத்தான்..தப்பா நெனைச்சிக்காதீங்க…)
இறைவா..உன் அருள் பாத்து என் நெஞ்சு உருகுது… ஆனா..எனக்கு ஒடம்பு முழுக்க நெஞ்சா வச்சி படைக்க மாட்டியா???
அதை நெனைச்சி நெனைச்சி அன்புக் கண்ணீர் விடனும்.. அதுக்கு ரெண்டு கண்ணு தானே இருக்கு… உடம்பெல்லாம் கண்ணா படைக்காமெ விட்டியெ என்னை..ம்..ம்…ம்…ம்…(அழுவதை மனக்கண்ணால் பாத்துகிடுங்க)
அந்த அவர் யார்? என்று இன்னும் தெரியாதவர்களுக்கு மட்டும்:
மாணிக்கவாசகர். திருச்சதகத்தில் வரும் பாட்டில் அந்த புலம்பல் வருது.
அடுத்து புலம்புவோமா… சாரி சந்திப்போமா???
Antha paattaik kudukkaliye…ethukku intha kanjatthanam….athukkaga neenga patta paattaik kudukkaathingo
பாடல் புத்தகம் கையில் இல்லாத போது எழுதிய பதிவு ஐயா அது…..