இஞ்சி பூண்டு பேஸ்ட்…பேஸ்ட் ஸ்பெஷல்… (எக்செல் பாடம் – 5)


இந்த சக்தி மசாலாவில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வந்தது மகளிருக்கு ரொம்ப நல்லதாப் போச்சி.. காலையிலேயே… கரெண்ட் இல்லையே என்று கதி கலங்க வேண்டாம்.

சாதாரண பேஸ்ட் இவ்வளவு யூஸ்புல்லா (உங்களுக்கு வேறு ஃபுல் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு அல்ல) இருந்தா…அதுவே..ஸ்பெஷல் தோசை மாதிரி… பேஸ்ட் ஸ்பெஷல் எப்படி இருக்கும்??…

ஆமா… அது எங்கே கிடைக்கும்? ன்னு தேடாதீங்க… இதுவும் எக்செல்லில் தான் இருக்கு..

ஏகப்பட்ட வசதிகள் அதில் இருந்தாலும்…நாம சில விஷயங்களை கொஞ்சம் பாக்கலாம்…

சாதாரணமா நாம் Ordinary Paste தான் செய்வோம்…சில சமயங்களில் Paste Spl தேவைப்படும்..அப்போ அதை தேடி ஓடனும்..எப்போ தேவைபடும்??? எவனுக்குத் தெரியும்..நம்ம எதுக்கும் தயாரா இருப்போமே??

உங்க Boss ஒரு பெரிய்ய Database குடுத்து Excel ல்ல அடிங்க என்றார்..Done…குஷியா வேலையை முடிச்சிட்டு mail அனுப்பி வச்சிட்டு, fb ல போகலாம்னு இருக்கும்போது…boss கிட்டெயிருந்து மெயில்…என்ன small letter போட்டே..எல்லாம் CAPITAL LETTERS ல வேணும்…

Word ல் இருக்கும் Change Case வசதி எக்செலில் தரப்படவில்லை..  அப்போ CAPITAL ஆ எப்படி மாத்துவது?? அல்லது small letters ஆக்குவது எப்படி??

ஒரு சின்னதா நான்கு பெயர்கள் எழுதுங்க…பிடிச்சமான நாலு பேரு:

A1 ambika
A2 suhashini
A3 kajol
A4 jothika.
(இதெப் பாத்தே எனனோட வயசு தெரிஞ்சு போச்சா??)

அதுக்கு அடுத்த Column B ல் CAPITAL தேவைக்கு, B1 ல் போயிட்டு =upper(A1) போடுங்க..CAPITAL வந்திருக்கும்..

B1 வோட காதைப் பிடிச்சி (அதைத்தான் Fill Handle என்று நாகரீகமா பில்கேட்ஸ் பேர் வச்சிருக்கார்)…அப்பிடியே B4 வரைக்கும் கொண்டு வாங்க…எல்லாம் CAPITAL ஆயிருக்கும்..

small க்கு மாத்தனுமா?? =lower() போட்டு வாங்குங்க… மொதோ லெட்டர் மட்டும் Capital வேணுமா?? அதுக்கும் வழி இருக்கு..=proper().

சரி இதுலே பேஸ்ட் எங்கே வந்தது??? பொறுமை… பொறுமை… இனி வரும்…

A1 to A4 சங்கதிகள்… அதான் பழசு தப்பா அடிச்சது, நமக்குத் தேவை இல்லைன்னு நீங்க delete பண்ணா…எல்லாம் பூட்டுக்கும்…  அதாங்க…எல்லாம் ஒண்ணா காணாமப் போகும்…

இப்போ தான் ஒரு சின்ன வேலை செய்யணும் நீங்க… இதை delete செய்யும் முன்னர் சின்னதா ஒரு சங்கதி… எதை மாத்தினீங்களோ…அதை select செய்ங்க…அதான்..B1 to B4 வரை.. copy செய்ங்க…( சுத்தி எறும்பு ஓடுமே??? அப்பொ சரி).. அங்கேயே இருந்தபடி right click செய்யுங்க…

அப்பொத்தான் Paste Special கடவுள் தரிசனம் தருவார். (நல்ல வேளை…2003 க்கும் 2007க்கும் no change) அப்போ ஒரு window வரும். அதில் value செலெக்ட் செய்து OK சொல்லுங்க… போதும்..

இனி நிம்மதியா..பழசை delete செய்யலாம்… என்ன Special நல்லா இருக்கா…?. இதே மாதிரி…எதாவது ஒரு payment details இருக்கு. எல்லாருக்கும் 50 ரூபா சேக்கணுமா?… சேக்கலாம்…  அப்புறம் போன பாடத்தில் பாத்த validation ஐ தூக்கி நெறைய எடத்துக்கு போடணுமா? (ஆனா அந்த cell லிருக்கும் value போடாமல், வெறுமனே validation மட்டும் paste செய்யணுமா.?.. விடாதீங்க..கெட்டியா பிடிங்க..நம்ம Paste Special ஐ.

வேறு எதைப் பற்றியாவது (எக்செலில் தான்) சந்தேகங்கள் இருந்தா… கேளுங்க… எனக்குத் தெரிஞ்சா..இந்த மாதிரி வியாக்யானம் செய்றேன்..

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி..

3 thoughts on “இஞ்சி பூண்டு பேஸ்ட்…பேஸ்ட் ஸ்பெஷல்… (எக்செல் பாடம் – 5)

  1. Muralidharan says:

    பயனுள்ள எக்சல் டிப்ஸ். சுவாரசியமா சொல்லி இருக்கீங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s