காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? என்ற கேள்வி ஐஸ்வர்யா ராய் மாதிரி உலக அழகிகளைப் பாத்தால் தானாகவே வரும். ஏன்னா… உலகமே அணுக்களால் ஆனது தானே? அப்பொ ஏன் இந்த ஐஸ்வர்யா மட்டும் பாக்க இவ்வளவு குளிர்ச்சியா இருக்கு?
காரணம் 1: பெயரில் ஐஸ் இருப்பதால் இருக்கலாமோ!!!
காரணம் 2: மாற்றான் தோட்டத்து மல்லிகை.
காரணம் 3: அக்கரை அழகி (இக்கரைக்கு அக்கரை குளிர்ச்சி)
உலகத்தில் உள்ளதிலேயே சின்னது.. அணு… அணு(ஹாசன்) நீங்கலாக.
அணு பற்றிய அறிவியல் உண்மைகள், அணுவால் கரெண்ட் எடுக்கிறது இதெல்லாம் … நம் தமிழ் மக்கள் அந்தக் காலத்திலேயே அதைப் பத்தி தெரிஞ்ச்சி வச்சிருந்தாங்க..
அட.. அப்பொ நீங்களும் அதை தெரிஞ்ச்சிக்க வேணாமா??
திருக்குறள் எப்பேர்ப்பட்ட நூல்?
அதைப் பத்தி எழுத வந்த புலவர்கள் சொன்னது பாத்தா ஏதோ கலைஞருக்கு பாராட்டு விழா வச்சி அங்கே வாலியும் வைரமுத்துவும் வரிஞ்சு கட்டி எழுதுறது மாதிரி இருக்கு.
முதலில் வரும் இடைக்காடர் ஆரம்பிக்கிறார். குறள் எப்படி இருக்குன்னா… ஒரு கடுகை கையில் எடுத்து அதுக்கு மேலே போர் போட்டு ஏழு கடலையும் உள்ளே தள்ற மாதிரி இருக்காம்.
அது போவட்டும் அடுத்து வரும் நம்ம கவிக்குயில் ஔவையார்… கடுகுன்னா பெரிசாச்சே… அதை விட சின்னதா.. அணுவுக்கு உள்ளே ஏழு கடல் தண்ணி நிறப்பின கணக்கா இருக்காம்.
ஒன்னு மட்டும் தெரியுது. அணுவைப் பற்றிய அறிவு அப்பொவே இருந்திருக்கு.
இன்னும் கொஞ்சம் தள்ளி 8 – 12ம் நூற்றன்டுக்கு வந்தா…
அங்கே… ஒரு அணு ஆராய்ச்சியாளர் நிக்கிறார். கிட்டக்க போய் பேர் கேட்டேன். மாணிக்கவாசகர்ன்னு பதில் வந்தது.
சரி அணு பத்திய அறிவியல் கருத்து கேட்டா…
வழக்கம் போல் சிவன் பத்தியே பாடி நடுவுலே அணுபுராணமும் பாடிட்டார். தேவர்கள் கூட சிவ வடிவு எப்படின்னு தெரியாம அணுவுக்கு உள்ளார எல்லாம் போய் தேடிட்டு குழம்பிட்டாங்களாம்…
சரிமா… வா சாமி… நானு இந்த போஸ்டிங்க் முடிக்கனும். பாட்டு கெடைச்சா முடிச்சிருவேன். எங்கே கெடைக்கும்னு சொன்னா நல்லா இருக்கும்.
திருவாசக திருச் சதகத்தின் 3வது பாட்டு நெட்டுல தேடிப்பிடிச்சு எழுது…
நன்றி மாணிக்கவாசகச் சாமி.. நன்றி.
தேடிக் கிடைத்த பாட்டு இதோ…
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணம் தான் தடுமாறி இமையோர் கூட்டம்..
இலக்கியத் தேடல் தொடரும்…