Sorting as you wish in Excel


திட்டு வாங்காமல் வரிசைப் படுத்த (எக்செல் பாடம் 2)

வரிசையா நில்லுங்கப்பா என்று சொல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது சிறு சிறு சலசல்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும்..

வரிசைப்படுத்துதலில் (Sorting) இரண்டு முறை தான் ரொம்ப பாப்புலர். ஏறுமுகம் (Ascending order) & இறங்குமுகம் (Descending Order). [அப்போ ஆறுமுகம்..??? என்று யாரும் கேட்டு வைக்காதீங்க…] இவைதான் பெரும்பாலும் பயன் படுத்துவோம்.இவைகள் நம்பர்களை வைத்து செய்யும் போது எல்லாம் நல்லாத்தான் போகுது… Marks, Amount, Age, Profit, Value இப்படி…

என் கிட்டே ஒருத்தர் வந்தார். தங்கள் அலுவலக அதிகாரி & ஊழியர்களின் பெயர், அவர்களின் Designation அவரின் கையில். அதனை வரிசைப் படுத்துமா எக்செல் என்றார்…

அதனால் என்ன என்று அதனை வாங்கினேன்.. பதவிகள் இப்படி :

Director; Dy Director, Asst Director, Manager, Asst Manager, Assistant, Head Clerk, Clek, Peon, Watchman.

 பெயரின் alphabetical order ல் காண்பித்தேன்.. பதவியின் பெயர் படி வேண்டும் என்றார்…

 Acending order ல் போட்டா, Assistant மேலே வருகிறார்.

 மாத்திப் போட்டா..Watchman மேலே இருக்கார்..

எனக்கு Heiraritical Order ஆக வேண்டும் என்கிறார்…அதாவது Director தான் மேலே இருக்கனும். Watchman கீழே தான் இருக்கனும். முடியுமா???

உங்களுக்கு தெரிந்தால் (இந்த குறைகுடம் ஏதோ கூத்தாடுதுன்னு சொல்லிட்டு போயிடுங்க)

தெரியாதவர்கள் மேற்கொண்டு படிங்க…

தனியா ஓர் எடத்துலே உங்களுக்கு வேணும்கிற வரிசையை அப்படியே entry செய்ங்க..

Director
Dy Director
Asst Director
Manager
Asst Manager
Assistant
Head Clerk
Clek
Peon
Watchman.

இதை மொத்தமா செலெக்ட் செய்யுங்க, மவுஸ் வச்சி…. அதை (Range என்பார்கள்). மேலே இருக்கும் செல்லில் இருந்து Shift + Down Arrow மூலமும் கூட செய்யலாம். select செய்து வச்சிட்டு, அப்படியே Menu Bar ல் Tools..ஐ தட்டுங்க…Option தேடிக் கிளிக்குங்க…Custom Lists தட்டுங்க…ஒரு ஓரமா Import மேலே இன்னொரு தட்டு…அப்புறமா Add மேலே சின்ன குத்து…கடைசியா ஓகே சொல்லி அந்த ஜன்னலை மூடுங்க…

அப்புறம் நீங்க வரிசைப் படுத்த வேண்டிய லிஸ்டில் போங்க… நேரே AZ அல்லது ZA இதெல்லாம் தட்டாமல் மெனு பாரில் (எதுக்கு இந்த மனுஷன் அடிக்கடி பாரை ஞாபகப் படுத்துறார்ன்னு யோசிக்காதீங்க) Data அப்புறம் Sort மேலே லெசா செல்லமா தட்டுங்க…

ஒரு ஜன்னல் திறக்கும்…(காத்தும் வராது..கேமிராவும் இருக்காது….நன்றி: நித்யானந்தா)

மறுபடியும் Ascending or Descending தான் இருக்கும்..ஆனா இடது பக்கத்தில் ஒரு Option முனிவர் இருப்பார்… மெதுவா தட்டினால், First Key Sort Oder ஆசி கிடைக்கும்..அப்படியே உள்ளே போனா…நீங்க ஏற்கனவே கொடுத்த லிஸ்ட் இருக்கும்…இதை இதைத்தான் எதிர்பாத்தேனு சொல்லி ஆமான்னு சொல்லுங்க…

பெயரும் பதவியும் உள்ள பெரிய லிஸ்ட், நீங்க எதிர்பாக்கும் வகையில் உங்களால் வரிசைப்படுத்தி அசத்த முடியும்…

அசத்துங்க…எத்தனை பேர் அசத்தினாங்கன்னு எழுதுங்க… 

எக்செல் பாடங்கள் தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s