நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…
இப்படி நீங்க யார் கிட்டெயாவது சொல்லிப் பாருங்க… உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.. (கொஞ்ச நாளுக்குத்தான் இந்தப் பெயரை யூஸ் செய்யலாம். அப்புறம் ஆள் பேரை மாத்தி அதே புளுகு புளுக வேண்டியது தான்).
நாம பொதுவா எப்பொ சந்தோஷமா இருப்போம் தெரியுமா?? யாராவது நம்மளை பத்தி ஏதாவது சொல்லனும் நல்ல விதமா…அதே ஏதாவது வில்லங்கமா சொன்னாங்க…அம்புட்டு தான்…அன்னெக்கி பூரா மூட் அவுட்… அவங்களுக்கும் அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும்..
துணிமணி நகை நட்டு இவை எல்லாம் அந்த எதிர்பார்ப்பின் விரிவு தானோ… ஒரு வகையில் ஃபேஸ்புக்கில் எழுதுவது கூட அதன் extension மாதிரி தான். அதுவும் ஒருத்தரோட கம்பேர் செய்து சொல்லிட்டா தாங்கவே முடியாது நம்மாலெ…
நாம ஏதாவது எசகு பிசகா சொன்னா… அண்டப் புளுகு…ஆகாசப் புளுகு என்பார்கள்… ஆனா அதையே கவிஞர்கள் சொன்னா… தலையில வச்சி ஆடுவாங்க…
எப்பொவுமே தமிழ் பாட்டு பக்கமே தலை வச்சி படுக்கும் நாம் கொஞ்சம் மாறுதலா வடக்கே தலை வச்சி படுத்துப் பாக்கலாமே…
ஜேசுதாஸ் பாடிய ஜப் தீப் ஜலே ஆனா பாட்டில் வரும் வரிகளில், நீ வந்த பிறகு தான் நட்சந்திரங்களே வருதுங்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொருவர் காதலியின் கையைப் பாக்கிறார்… மெஹந்தியில் சிவந்திருக்காம்..(அது இல்லாமலும் சிவப்பு தானே??) ஆனா அது அந்த சிவப்பு இல்லையாம்.. என் இதயம் வடிக்கும் ரத்தமாம்.. இது எப்படி இருக்கு?? (அச்சா சிலா தியா துனே)
தூனே காஜல் லகாயா பாடலில் உன் கண்ணில் கரு மை இட்டால், பகல் கூட ராத்திரி அயிடுமடி என்கிறார் மற்றவர்.
கஜல் பாடல்கள் போல் தமிழிலும் பல பாட்டு இருக்கு… வைர முத்து அதை எல்லா வாயிலும் கொண்டு சென்றவர். சாம்பிளுக்கு ஒரு பாட்டு போடலாமா??
உன் வெள்ளிக் கொலுசொழி வீதியில் கேட்டால்…. அத்தனை ஜன்னலும் திறக்கும்.
நீ சிரிக்கும் போது பௌர்னமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்
நீ மல்லிகை பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும். …
இந்த மாதிரி நீங்க சொன்னா..உங்களை ஒரு மாதிரியா பாப்பாய்ங்க.. கவிஞருக்கு லைசன்ஸ் இருக்கு இப்படி சொல்லலாம்.
அடப்பாவிகளா.. இல்பொருள் உவமை என்று இதைத் தானே காட்டுக் கத்தல் கத்தி தமிழ் வாத்தியார் சொன்னார்.. அப்பொ மண்டையில் ஏறலையே..
இப்பொ சிம்பிளா சொல்லவா… தமண்ணா சிரிச்சா காது வரை வாய்… காது வரை வந்தா அது வாயா??? அது கார்ட்டூன்.. ஆனா அப்படி சொல்லுவோம்… அப்பொ இ பொ உ அ இனி மறக்காது உங்களுக்கு..
டொய்ங்க்… Hi …
ஒரு Chat Message வருது. யாருன்னு பாத்தா… நம்ம friend கம்பர் தான். Hai… Whats Up பதில் தந்தேன்..
என்ன டாபிக் இன்னெக்கி?
உவமை பத்தி…உங்களை பத்தி சொல்ல இருந்தேன்…அதுகுள்ளே நீங்களே வந்துட்டீங்க….
கம்பர் Offline ஆகி விட்டார்.
சரி நம்ம தொடர்வோம்.. பாரதி மேலெ நல்ல அபிப்பிராயம் வந்து பாரதி தாசன் ஆனார் கனக சுப்புரத்தினம். அவர் மாதிரியே…மாதிரியே சுப்பு ரத்தின தாசன்…ஆகி அதுவே சுரதா ஆன கதை சொல்லிட்டு அப்புறம் கம்பருக்கு போவோமே… ஆமா உவமைக் கவிஞர் சுரதாவை உவமை டாபிக்லெ எடுக்காமெ இருக்க முடியுமா???
இப்பொ கம்பரை பாக்க போவோம்… ஒரு இடத்திலெ கம்பர் தினறுகிறார்.. இதுக்கு உவமையே சொல்றதுக்கு இல்லையேன்னு…எந்த இடம் தெரியுமா?? சீதையை முதன் முதலில் பாத்த இடம் தானே??? அது தான் இல்லை… அந்த ஐயோ..சமாச்சாரம் தான் எல்லாரும் சொல்றாகளே…நாம வேற மேட்டர் பாக்கலாமே??
நம்பிக்கை இல்லாத மனத்தோட வாணர சேனையைப் பாக்கிறார்…பாக்கிறார்…பாக்கிறார்… நம்பிக்கை அப்பவே வந்திருச்சி. ஆமா எப்படி இருந்தது தெரியுமா?? கம்பர் யோசிக்கிறார்.. கடல் ஆழம் மாதிரி… இல்லையே…அதைக் கண்டுபிடிக்கத்தான் Echo Sounder மாதிரி சாதனம் இருக்கே…
இருபது நாள் ராமர் லெட்சுமன் ரெண்டு பேரும் Shitf போட்டு மாத்தி மாத்தி Duty பாத்து… பாத்தால் கூட பாதி கூட்டத்தைத்தான் பாக்க முடியுமாம்… முழுப் படை பத்தி சொல்ல உவமையே இல்லையேன்னு கவலையில் இருக்காராம் கம்பன்..
அடங்க் கொப்புரானே… கம்பண்டா…
அத்தியொப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறுயாதோ பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்போர் எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ
இந்த ரேஞ்ச்சுலே போனா நானும் கம்பராமாயணம் பாதி முடிக்கிறதே பெரிய விஷயம்ன்னு நெனைக்கிறேன்.
நீதி: முடிந்தவரை எவரையாவது பாராட்டுங்கள்… முடியலையா..இந்த மாதிரி நாம எழுதுவதையாவது படிங்க..
தொடருவேன் !!!
படிச்சாச்சி ! ரண்டு வரியும் எழுதிர்ரேன்.
நீ அ த மா ! அதமா என்னா நல்லா இல்லே !
அதனாலெ, தமண்ணா வை நீக்கிவிட்டு வேறு ஒரு ‘மா’ வோ அல்லது வேறு ஒரு எழுத்தை போட்றது நல்லது !
நீங்க யாருடைய மொழியில் எழுதுகிறீர்கள்? மொழியியல் கொஞ்சம் படிச்சா பதில் சொல்ல முடியும் !
ஆனா, எழுதறது புரிஞ்சிக்க முடியுது. ரொம்ம்ம்ப ரொம்ம்ம்ப
நன்னா இருக்கு !
எனக்கு மொழியியல் என்று ஒன்று இருப்பதே உங்கள் தொடர்புக்குப் பிறகு தான் தெரியுது… ஏதோ மனசிலெ பட்டதை பட்டுன்னு எழுதிறேன். அம்புட்டு தான். சினிமா வசனங்கள் தான் என் அகரதி. பதிலுக்கு நன்றி.