அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்ற விளம்பரங்களுடன் சில படங்கள் வந்தன. பழிக்குப் பழி… ரத்ததுக்கு ரத்தம் என்பது அதில் கண்டிக்பாக வரும். அதோடு வில்லன்கள் குழுவோடு தவறாமல் ஒரு கவர்ச்சி நடனம் இருக்கும்.
ஆனால் சினிமா வளர வளர… படம் முழுக்க சண்டைகளும், நெகட்டிவ் ஹீரோ என்ற பெயரும், வில்லன் கதாநாயகனாக மாறி கதாநாயகியே கவர்ச்சி நடனம் ஆடும் பரினாம வளர்ச்சி அடைந்து விட்டது.
சினிமா இப்படி என்றால், சின்னத்திரை நிலவரம் இதை விட மோசம். இதில் கதாநாயகன் கிடையவே கிடையாது. சுமாரான ஒரு ஃபிகர் தான் கதாநாயகி. உள்ளதிலேயே சூபர் ஃபிகர் தான் வில்லி ரோல் செய்யும்… (வில்லி தானே சீரியல் முழுக்க வரனும்).. வெட்டியிருவேன், குத்திடுவேன், கொன்னுடு, போட்டுத்தள்ளு, ஜெயில், போலீஸ் எல்லாமே சர்வ சாதாரனமா எல்லா சீரியல்களிலும் வரும்.
ஆனா இந்த உலகமே, பழிக்குப் பழிக்கு எதிரா நிக்கிரேன்னு நின்னுட்டு பழிக்குப் பழி வாங்கவும் துடிச்சிட்டு இருக்கு என்பது தான் கசப்பான உண்மை.
சரி.. பழிக்குப் பழி வேணாம்.. என்ன செய்ய??
ஏசு பெருமான் சொல்றார்… ஒரு கண்ணத்தில் அடித்தால்…காட்டு அடுத்த கண்ணத்தை… (ஏகே 47 வச்சிம்…. அணுகுண்டு போடும் இந்த காலத்தில் திரும்ப ஆளே இருக்க மாட்டானே??)… நம்மாளு சொல்றான்… அவரு சாமி…
சரி..காந்தி…?? அவரு தான் மகாத்மா ஆச்சே…?? நாம எல்லாம் சாதா மனுஷங்கள் ஆச்சே??
சரி … வேற வழி இல்லெ… கம்ப ராமாயாணம் போக வேண்டியது தான்…
இல்லையே..அதுவும் சிரமம் தான். நம்ம ராமரும் கூட அவதார புருஷன் தானே??
கடைசியா நம்ம தாத்தா சொன்னா கேப்பீகளா??? (பாட்டி சொல்லை தட்டாதே தெரியும்.. அது என்ன?? தாத்தா மேட்டர்???)
அந்த தாத்தா யாரு தெரியுமா?? நாம கொரங்கிலிருந்து தானே வந்தோம்.. அப்பொ கொரங்கும் நம்ம தாத்தா தானே..??
வாலி தாத்தா சொல்லும் சங்கதி தீபாவளி நாள் அதுவுமா காது கொடுத்து கேளுங்க..
நான் ரெபர் செய்றது…தாடி வச்ச கவிஞர் இல்லெ… நெசமாவே வால் வச்ச வாலி சொன்ன சேதி தான் நான் சொல்ல வந்த தகவல்.
பெரும்பாலும் திருவாசகத்தில் எல்லா இடங்களிலும் நாயினும் கீழாக, கேவலமாக..என்று அடிக்கடி வரும்.
ராமாயணத்தில் வாலி சொல்றார்: ஓவியத்தில் எழுத்தப்பட்ட வடிவம் போல் வடிவம் கொண்ட ராமனே!!! (தப்பா வரைஞ்சதா வாலி கண்ணுக்கு தெரியுதோ??). நாய்யான நான் ஒண்ணு கேக்கேன். நான் குடிச்சா பயங்கரமா இருப்பேன்.. ஆனா இந்த சுக்ரீவன் கீரானா அவன் பயங்கரமா குடிப்பான் (கருப்பா பயங்கரமா வடிவேல் காமெடி ஞாபகம் வருதா??). அப்படி ஏதாவது அவன் தப்பு செஞ்சிட்டா என்னை கெடாசின மாதிரி அவனெக் கெடாசிட வேண்டாம்.. ப்ளீஸ்..
பகைவன் சுக்ரீவன். சண்டை போட்டு தோற்றது (முறையா இல்லையா என்ற வாதம் இங்கு வேண்டாம்… ஏகமா அலசி இருப்பாய்ங்க..)
வள்ளுவர் ரெண்டு வரியில் சொன்ன நன்னயம் செய்யும் செயல் பற்றி கம்பர் சொன்ன அந்த நாலு வரிப் பாடல் இதோ:
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாநி புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.
நரகாசுரன் கேட்ட வரம் தந்து தீபாவளி கொண்டாட வைத்ததும் இன்னா செய்தாரை பொறுத்து நல்லது செய்த மாதிரி தெரியலை???
யோசிங்க…. நல்லா யோசிங்க…
அனைவர்க்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
அது வேறெ ஒண்ணுமில்லெ. உலகத்திற்கு, குறிப்பா நம் பாரத தேசத்திற்கு
வருடம் ஒரு முறை சிறப்பா ஒரு பண்டிகை கொண்டாடி எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும்னு எண்ணி நரகாசுரன் தன் உயிரை தியாகம்
செய்துள்ளான் ! அதற்காக நாம் ஒன்றும் நன்றி சொல்லத்தேவை யில்லை !
அதான் அவனுக்கு புகழ் சாஸ்வதமாக கிடைத்து விட்டதே. பகவானைத்தான் நாம் கும்பிடனும் நற்கதி அடைவதற்கு.
எப்படியோ நாம சந்தோஷமா இருக்க கடவுள் நரகாசுரன் கூட்டணி. மக்களுக்கு அமோக வெற்றி.