அழகான ராட்சஷி என்று உங்கள் தோழி அல்லது மனைவியை சொல்லிப்பாருங்கள்…
ஒரே நாளில் விலகி விடுவார் அல்லது தலாக் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.
அது எப்படி அழகாவும் இருக்கே… ராட்சஷி மாதிரியும் இருக்கேன்னு சொல்ல முடியும்??? (அழகான எந்திரன் …ஓரளவுக்கு ஓகே சொல்லலாம்)
காதலி பிரிவு தாங்கலைன்னு சொல்லலாம்….. வேதனையா…அதுவும் அதே பாடலில் எப்படி வருது தெரியுமா? அடிமனசை அருவாமனையால் அறுக்கிறயேன்னு…
பார்த்தாலே மனசைக் கொள்ளை கொள்ளும் மனிஷாவைப் பாத்து இப்படி பாட்டு வந்தது. ஒரு வேளை ஹீரோயின் மனிஷான்னு சொல்லாமெ ஷங்கர் பாட்டு எழுதி வாங்கிட்டாரோ…???
சரி.. அப்படியே… காலச் சக்கரத்தை கொஞ்சம பின்னோக்கி ஓட்டிப் பாப்போம்.
அழகிய பன்னியேன்னு ஒரு பாட்டு இருக்கு… மனிஷாவுக்கு ராட்சசின்னா… யாரைப்பாத்து பன்னியேங்கிறார் கவிஞர்??
இடக்கு மடக்கா பாட்றதுன்னு முடிவு பன்னிட்டா நாம என்ன செய்ய முடியும்??
மேகமே…நற்பண்பு கொண்ட மேகமே ( கொஞ்சமா பெய்யனும்…ஸ்கூல் லீவு வுட்ற அளவுக்கு பெய்யாத நல்ல பண்பு வேணும்)
என்கிட்டெ எந்த நல்ல பழக்கமும் இல்லே.. ஆனா நீ என் கிட்டெட இருக்கே..
மனுஷன் திருக்கழுக்குன்றம் போய் கும்பிடப்போயிட்டு,
(கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்ங்கிறமாதிரி) நானு கும்பிட கயிலையை விட்டு இங்கே வந்துட்டியாங்கிறாரு!!
கோலமேனி வராகனே என்ற திருக்கழுக்குன்றப் பதிகம்.
இனிமேல் அழகான ராட்சஷியேங்கிற பாட்டு கேக்கும் போது கோலமேனி வராகனே தான் ஞாபகம் வரணும்…சரியா??
கம்பராமாயணப் பாடலும் இல்லை !
கோலமேனி வராகனே என்ற திருக்கழுக்குன்றப் பதிகமும் இல்லை !
ஓ ! அதுக்காகத்தான் ‘புரியாத மொழிகள்’ என்று தலப்பு !
அப்பு|றம் ‘காதுல பூ’ என்று எதற்கு சொல்லனும்?
ஏதாவது எழுதினாத்தான் நான் நீங்க எழுதினதை படித்துவிட்டேன் என்று கொள்ளலாம் ! அதான் இந்த மறுமொழி .(feedback !)
எத்தனை பேர் படிக்கிறார்கள் எப்பொ படிக்கிறாக? எதைப் படிக்கிறாக என்பது எனக்கு தினமும் தெரிகிறது.
யார் படித்தார்கள் என்பது தான் இந்த பதிலில் உறுதி ஆகிறது.
பதிலுக்கு நன்றி.