என்ன இது ஐய்யன் வள்ளூவன் பத்தி இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரலாமா? – ன்னு யோசிக்கீகளா??
வள்ளுவன் நாய்னா வாசுகி ஆன்டியெ… அடியே வாசுக்குட்டி என்று செல்லமா அழைக்க, ஓடி வந்தாங்களாமே ( மத்த கதை எல்லாம் எல்லார்க்கும் தெரியுமே)
என் சந்தேகம்.. ஏன் அப்படி ஓடி வரனும்?
அட கிணத்தாண்ட தண்ணி இஸ்துகினு கிடக்கேன்…செத்த நேரம் கம்முன்னு கெட என்று வாசுகி ஆண்டி சொல்லலையே…
வள்ளுவனும் வள்ளுன்னு விழும் பார்ட்டியோ???
அவர் கோபத்தை ரெண்டா பிரிக்கிறார்.
எனக்கு பயங்கர கோபம் …யார் மேலே தெரியுமா??
சுரேஸ் கல்மாடி மேலே காமன்வெல்த் ஊழல்
மன்மோகன்சிங் மேலே விலைவாசி ஏற்றம்
தனுஸ் மேலே.. என்ன மூஞ்சி அது ஹீரோவா??
ஆனாலும் அடக்கி வச்சிருக்கேன்.. அதை யார்கிட்டேயும் காண்பிப்பதில்லை.
வள்ளுவன் இதற்கு இட்ட பெயர் : செல்லாக் கோபம்.
தன் கீழ் வேலைசெய்பவர் மேல் வரும் கோபம் (அரசு வேலை தவிர)
மனைவி மேல் கணவன் காட்டும் கோபம் (தைரியசாலிகள்)
குழந்தைகள் மேல் பெற்றோர்கள் காட்டும் கோபம்.
இவைகள் செல்லும் கோபமாம்- வள்ளுவன் சொன்னது.
ரெண்டையும் சொல்லி சாலமன் பாப்பையா ரேஞ்சில் தீர்ப்பும்
சொல்லுது வள்ளுவம்.
செல்லும் கோபத்தை அடக்கு… செல்லாக்கோபம் கம்முன்னு கிடக்கும் .
சரி இப்பொ சொல்லுங்க..
வள்ளுவன் வள்ளுன்னு விழுவாரா???
கண்ணீர்ல இரண்டு – சோகம் & ஆனந்தம் என்கிற மாதிரி
கோபத்தில இரண்டு – செல்லும் கோபம் & செல்லாக் கோபம்.
இன்னும் எது எது இரண்டா இருக்கு என்று சொல்லுங்க !
இன்னும் நிறைய யோசிக்கணுமோ???
யோசித்து எழுதுகிறேன்.