இதைப் படிச்சதும் எஸ் வி சேகர் நாடகமும் அதை தொடர்ந்து வந்த படமும் தான் ஞாபதக்துக்கு வரும். ஆனா அந்த தொடரின் மூலம் என்ன தெரியுமா??
அன்பே சிவம்… எல்லார்க்கும் தெரியும். எல்லா சிவ பூஜைகளின் முடிவிலும் சிவனை பூவால் அலங்கரித்து பூவடிவாக்கி விடுவார்கள். அப்போது பக்தர்களும் அன்பு வடிவாகி அப்படியே சிவனோடு சேரும் அனுபவமாய் ஆனந்தத்தில் இருப்பர்.
அதே பீஃலிங்கில் சிவனையும் வீட்டிற்கு கொண்டு செல்லும் உணர்வுடன் சில பூக்களை தலையில் வைத்து வந்தனர். தலையில் வைத்த பூ நில்லாது போக, அதனை காதில் வைத்து பாதுகாப்பாய் வீடு வரை கொணர்ந்தனர்.
அன்பு மயமான அந்த பக்தர்களிடம், அப்போது எது கேட்டாலும் அவர்கள் தருவார்கள். வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். எல்லாம் சிவ மயம் அன்புமயம் என்று நம்புவர்..
இதே தான் பிற்காலத்தில் நம்பமுடியாத செய்தியாக இருந்தால் “இதை யாராவது காதுல பூ வைச்சவன்ட்டே போய் சொல்லு” ங்கிற தொடராக தவறாக பயன் பாட்டில் வந்து விட்டது.
ஆதாரம்: பூ நாளும் தலை சுமக்க என்ற தேவரப் பாடல்.
திருவாசகம் போட்டு அறுத்த பார்ட்டிகள் இப்பொ தேவாரத்துக்கு வந்துட்டாங்கைய்யா என்று முனக வேண்டாம். மருந்துகள் கசக்கும். ஆனா உடம்புக்கு நல்லது. உற்சாக பாணம் (ஸ்மிரனாஃப்) இனிக்கும் ஆனால் கெடுதல்.
இதெல்லாம் யாராவது காதுலெ பூ வச்ச ஆளுக தான் படிப்பாய்ங்க- அப்படி சொல்றீகளா???
good….