ரஜினியின் சிவாஜி படம் வராத வரை தமிழக மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த இரண்டு பெயர்கள். அங்கவை & சங்கவை. சாலமன் பாப்பையாவின் மகள்களாக வந்து பழகத் துடிக்கும் குமரிகள் தான் அந்த இருவரும். பாப்பப்யா தேர்வு செய்த அக்குமரிகளின் பெயர்கள் சங்க காலத் தமிழ்ப்பெயர்கள்.
எப்பொப் பாத்தாலும் காமெடி சானல்களில் வந்து கொண்டிருக்கும் அந்த அங்கவை சங்கவைகளின் உண்மைக் கதை தெரியுமா? அது ஒரு சோகமான கதை.
இதோ அதே சோகமான கட்டத்தில் நாமும் அவர்களோடு நுழைவோம் அந்தக் காலத்தில். வானத்தில் வெள்ளை நிலா. வெளிச்சமான ஆகாயம். போன மாதம் அங்கவையும் சங்கவையும் பாத்த அதே நிலா. ஆனால் சந்தோஷம் மட்டும் இல்லை.
சோகத்தில் பாட்டும் வருகிறது. போன மாதம் தந்தை உடன் இருந்தார். தூரத்தில் தெரியும் குன்றம் எங்கள் வசம் இருந்தது. ஆனால் இப்போதோ எங்கள் தந்தை மூவேந்தர்கள் சதியால் கொல்லப்பட்டார். அந்தக் குன்றும் எங்கள் வசம் இல்லை என்று சோகத்தை பிழிந்தெடுக்கும் வகையில் பாட்டு போகிறது.
தந்தை யார் தெரியுமா? முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல் தான். (தர்மம் தலை காக்கும் என்பார்கள். இவரின் தலையை எடுத்து விட்டதே?)
யார் அவரை கொன்றது? என்ற தகவலை வரலாற்றில் இருந்து மறைத்து விட்டார்கள் அந்தக் காலப் புலவர்கள். (குற்றம்!! நடந்தது என்ன?? என்று உயிரை எடுக்கும் டி வி சேனல்கள் இல்லாத நல்ல காலம் அது..)
புறநானூற்றில் வரும் பாரிமகளிர் எழுதிய பாடல் இதோ:
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றம் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றெறி முரசின் வேந்தர், எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையுமிலமே!
இனிமேல சிவாஜி படக் காமெடி வரும் போது அங்கவை சங்கவை பாக்கும் போது கொஞ்சம் சோகமும் வரனும்.
நல்ல செய்தி.