மதுரை என்றதும் மல்லி ஞாபகம் வந்தது அந்தக்காலம். சமீப காலமாய் ரசிகர் மன்றங்கள் தான் இங்கே மிகப் பிரபலம். சாதாரண மன்றங்களாய் இருந்து பின்னர் நற்பனி மன்றங்களாய் மாறிய வரலாறும் மதுரைக்கு உண்டு.
வைரமுத்துவின் கவிதையே பாடலாக கவிதைத் தொகுப்பிலும் கூட மதுரையின் சிறப்பாக, தமிழ் சங்கங்களும் போட்டியாய் ரசிகர் மன்றங்களும் வளர்ந்த மதுரை என்று வரும்.
அது சரி இந்த ரசிகர் மன்றம் வைக்கும் கலாசாரத்துக்கு திறப்புவிழா செய்தவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
அப்போ நீங்க கொஞ்சம் பிளாஷ் பேக் அடிச்சுத்தான் பாக்கனும்.
அப்பொத்தான் உங்களால் திங்களூருக்கு வர முடியும். அங்கே அப்பூதி அடிகளை ஒரு வணக்கம் வச்சிட்டு வாங்க. விஷயம் அப்புறம் சொல்றேன்.
மத்த ரசிகர் மன்றங்களுக்கும் அப்பூதி அடிகள் ஆரம்பிச்ச ரசிகர் மன்றத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் அன்ன சத்திரம், திருநாவுக்கரசர் மோர்பந்தல், திருநாவுக்கரசர் படிப்பகம் என்று அந்தக் காலத்திலேயே தூள் கிளப்பி இருந்தார். ஆனால் அவரை ஒரு முறை கூட பாத்ததில்லையாம். (நம்ம ரசிகர் பட்டாளம் மாதிரி தான்).
ஆமா அந்த திருநாவுக்கரசர் என்ன அவ்வளவு பெரிய்ய காரியம் செஞ்சிட்டார்…அப்பூதி இப்படி மன்றம் வச்சி அலப்பரை பன்றார்?
நாவுக்கரசர் சிவனோடு கவுண்டமனி செந்தில் ஸ்டைலில் பேசக் கூடியவர். இதில் வேடிக்கை என்னன்னா சிவன் தான் செந்தில். (தமிழ் வளர்க்க ஆண்டவனே எவ்வளவு பெண்டாக வேண்டியிருக்கு?)
உண்மைதாங்க… தீவட்டித்தலையா, உன் தலையில தீ வைக்கன்னு செந்தில் தானே திட்டு வாங்குவார். தமிழுக்காய் அந்த திட்டையும் சிவன் வாங்கி இருக்கார்…
இந்த போஸ்டிங்கை பாட்டோட முடிப்போம்:
புழுவாய்ப் பிறக்கினினும் புண்ணியா உன்னடி என் மனத்தே
வழுவது இருக்க வரம் தரவேண்டும்- இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாத்ரிப்புலியூர்
செழுநீர் புனர்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே!!!
இனிமே செந்தில் திட்டு வாங்கும் போது சிவன் நினைவு வரட்டும் உங்களுக்கெல்லாம்.