ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டதனால் தான் நாகரீகமே வளர்ந்தது என்பார்கள். இது என்னவோ வெளி நாட்டுச் சங்கதின்னு நினைக்க வேண்டாம். கேள்வி கேட்டு குடைந்தவர்கள் நம் பழந்தமிழ் மக்கள்.
வாங்கின மனுவே காணாமப் போற இந்தக் காலம் எங்கே!!! மனு சொல்ல ஏதுவாய் மனுநீதிக்காய் மணி கட்டிய தமிழன் எங்கே!!! கேள்வி கேட்பதை தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் கண்ணகியால் மன்னன் முன்பு நீதி கேட்க முடிகிறது.
எல்லாம் சரி… இப்பொ என்னத்துக்கு இதெல்லாம்..???
அது ஒன்னுமில்லை ஸ்கூல் நாட்களில் ஒரு பதிலைக் கொடுத்து அதனை கேள்வியாக்கும் படி (ஆங்கிலத்தில் தான்)கேட்டிருப்பார்கள். ஒரு கேள்விக்கே நாம இவ்வளவு தினறும் போது 150க்கும் மேற்பட்ட கேள்விகள் ஒரு நபர் கேட்டால் அது எப்படி இருக்கும்? அதுவும் எல்லாக் கேள்வியும் எக்காலம்? (எப்போது?) என்றே முடிய வேண்டும்.
இப்படிக்கேட்ட அந்த சாதனைக் கவிஞர் கம் சித்தர் பத்ரகிரியார். யார் இந்த பத்ரகிரியார்?
பட்டினத்தார் எல்லாருக்கும் தெரியும். அவரை ஒரு ராஜா கூப்பிட்டு பாராட்டி ஒரு பொன்னாடை போர்த்தினாராம். {அந்தக்கால விலை உயர்ந்த பொன்னாடை… இந்தக்கால சரவனா ஸ்டோர்ஸில் கிடைக்கும் 125 ரூபாய் பொன்னாடை அல்ல}.
பட்டினத்தார் அதனை வாங்கி வெளியே வந்த போது ஒரு முதிய பாட்டி பாக்கிறதுக்கு கோரமாய் இருந்தவர் குளிரில் நடுங்கியவாறு இருக்க, அந்த போர்வை இடம் மாறியது. இதை பாத்து ஒரு மனிஷர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்தார்.
{போட்டுக் கொடுக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கே!!! அவருக்கு மந்திரி பதவி அல்லது ஆஸ்தான புலவர் பட்டம் குடுத்திருப்பாங்களோ!!} ராஜாவுக்கு கோபம் வந்து பட்டினத்தாரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். மறுநாள் காலை ராஜா கோவிலுக்குப் போனார். போனா அங்கே அந்தப் பொன்னாடை அம்மனுக்கு சாத்தி இருந்தது. அரண்டு போய் விட்டார் அந்த ராஜா. அவர் அப்போதே பட்டினத்தாரின் சீடன் ஆகி அரன்மனையை விட்டு வெளியேறினார்.
இப்படி பெயர் தெரியா ராஜாவா இருந்து வரலாற்றில் காணாமப் போயிருக்க வேண்டியவர் தான் நம்ம ஹீரோ. பத்ரகிரியார் என்று பெயர் மாறி வரலாற்றில் பதிவு பெற்றுவிட்டார். சமீபத்தில் பரமக்குடி போனபோது பத்ரகிரியாரின் 65 நிமிடம் பாடும் பாடல்கள் புளு டூத் வழியாக என் மொபைளுக்குக் கிடைத்தது. {பாத்தீங்களா… ஊர்ல எனக்கு இப்படி பத்ரகிரியார் பாட்டும் குடுக்குறதுக்கும் ஆள் இருக்கு}
பாட்டு சாம்பிள் பாருங்களேன்…
“வாசிதனை பார்த்து மகிழ்ந்துனை தான் போற்றாமல்,
காசவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே;
உடலுக்குள் நீ நின்று உலாவினதை போற்றாமல்,
கடல் மலை தோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே;
எண்ணாத தூரமெல்லாம் எண்ணி எண்ணி, பாராமல்
கண்ணாடிக்குள் ஒளிபோல் கண்டறிவதெக்காலம்”
இது புலம்பல் வகை தான் என்றாலும், கேள்வி கேட்கும் திறன் பாராட்ட வேண்டிய அம்சம்.
இனிமேல் பசங்க ஏதும் ஒரு கேள்வி கேட்டாலும் ஒன்பது கேள்வி கேட்டாலும் அவங்களை திட்டாதீங்க… யாருக்குத் தெரியும் எந்த வீட்டில் எந்தப் பத்ரகிரியோ??!!
T N Krishnamoorthi