அன்பு நெஞ்சங்களே…
உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாச் சிரிங்கன்னு சொன்னா … என்ன தோணும்?? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு தோணாதா??
ஆனா வள்ளுவர் மட்டும் எப்படி இடுக்கண் வருங்கால் சிரிங்கன்னாரு??
ஒரு வேளை இந்த LAUGHTER THEREOPHY அது இதுன்னு ஏதாவது அந்தக் காலத்திலேயே நெனைச்சி சொல்லிட்டாரோ!!! இருக்கலாம்.. யார் கண்டது??
எல்லாம் நன்மைக்கேன்னு இருக்கிறது ரொம்ப நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கலைன்னாலும் சரி…எல்லாம் நல்லதுக்குன்னே இருக்கிறது… ரொம்பவும் பக்குவமான நிலை..
சோகத்தின் உச்சியில் இருப்பவர்க்கு தெம்பூட்ட சொல்லப்படும் ஒரு கதை இதோ..(ஏற்கனவே கேட்ட கதை தானோ??)
காட்டில் ஒரு இளைஞனை சிங்கம் துரத்துகிறது. ஓடினான்.. ஓடினான்… ஒரு பாழுங்கினற்றின் ஓரத்தில் இடறி விழுந்தான்… விழும் போது ஒரு வேர் கையில் கிடைக்க அந்தரத்தில் தொங்கினான். கிணற்றின் கீழ் மதம் பிடித்த யானை… நீ கீழே
விழுந்தால்.. ஒரே மிதி என்று பிளிறுகிறது. மேலே சிங்கம்.. மேலே வா.. எனக்கு விருந்து நீ தான் என்று சிலிர்க்கிறது. அந்த நேரத்தில் ஒரு அணில் வேறு அந்த வேரைக் கடித்து வருகிறது…
எல்லாம் ஒரே சாபமான செயல்கள் தான்… எதிர்பாராத விதமாய் ஒரு மரத்து தேன் துளி வந்து அந்த இளைஞனின் உதட்டில் விழுகிறது… வரம் போல்..
அந்த நேரத்திலும் தேனை ரசிக்கச் சொல்லுவது தான் வாழ்வின் ரகசியம்..
கம்பரின் காவியத்திலும் இந்த வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருது.
வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்
இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று.
இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போவுது” ன்னு “எம் பொண்டாட்டி.. நிஜமாவே ஊருக்குப் போயிட்டா” என்று ஜனகராஜ் குதிப்பது போல் குதித்தாராம் அந்த ராஜா…
சாபம் வரமான கதை எப்படி இருக்கு??
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா??
இந்த சாபம் வரமான தகவலை ராஜா தன்னோட முதல் பொண்டாட்டிக்கே ராமன் காட்டிற்கு போகும் போது தான் சொல்கிறார்.
எல்லாத்தையும் பொண்டாட்டியிடம் கொட்டித் தீர்க்கும் ஆண் மக்களே… கொஞ்சம் கவனிங்க…
இவ்வளவு படிச்சவங்க அந்த பாட்டையும் கொஞ்சம் படிங்களேன்.. ப்ளீஸ்..
சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.
கம்பனின் கலக்கல் இன்னும் வரும்…
அது சரி…..இந்த மாதிரி போஸ்டிங்க் விடாமெ தொடர்ந்து வருதே…
இது வரமா??? சாபமா??