பாகப் பிரிவினை


பழங்கதை:

அது 1986. ஈ மெயில், ஆன்லைன் டிக்கெட்டிங் இல்லாத காலம்.

டிக்கெட்டுக்காய் ஒரு தந்தி வந்தது. அந்தமானுக்கு வர கப்பல் டிக்கெட் உறுதியாகி விட்டது என்று. சென்னை அலுவலகம் வந்தேன். உடனே தம்பு செட்டி தெருவில் போய் டிக்கெட் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்..

தெருப்பெயர் வித்தியாசமாய்ப் பட்டது. ஏன் இந்தப் பெயர் வந்தது???

அரதப் பழங்கதை:

ஒரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்களாம். சொத்துத் தகறாறில் (பெரிய தகராறு என்பதால் ர , ற ஆகிவிட்டது)வீட்டை ரெண்டாக்கி விட்டார்களாம். எல்லாம் பிரித்தாகி விட்டது. ஒரு செம்பு மட்டும் தான் மிச்சம்

விஜய் ஒரு படத்தில் வக்கீலுக்கு அசிஸ்டென்டாக இருந்து வாதி பிரதிவாதி இருவரையும்  பஞ்சாயத்து செய்து அனுப்புவார். அவர்கள் போகும்போது வரப்பு நீயே வச்சிக்க..இல்லெ நீயே வச்சிக்க என்று தோளில் கை போட்டு போவார்கள்.

இப்படித்தான் தம்பிமார்கள் இருவரும் செம்பை விட்டுக் கொடுத்தனர். ஆனால் மகளிர் அணி அந்த செம்பை விடுவதாய் இல்லை.

ஒரு செம்பை வைத்து வடிவேலுக்கு நிச்சயமான ஒரு கல்யாணத்தை ஒரு கல்யாண புரோக்கர் நிறுத்துவாரே, அந்த மாதிரி பிரச்சினை வளர்ந்தது.

செம்பு மேல அந்த மனைவிமார்களுக்கு என்ன அவ்வளவு பிரியம்?? கணவன்மாரின் நெத்தி பாத்து அடிக்க தேவையாய் இருந்திருக்குமோ!!! செம்பை விற்கவும் அவர்கள் தயாராக இல்லை. இறுதியில் ஆளுக்குப் பாதியாய் செம்பையும் வெட்டி எடுத்துக் கொண்டார்களாம்.

இது ஊர் முழுதும் பரவிவிட செம்பு வெட்டியவர்கள் உள்ள தெரு என்று முதலில் பேசப்பட, பின்னர் செம்பு வெட்டி தெரு என்றாகி இப்போது தம்பு செட்டி தெரு என்றாகி ஜாதி பெயர் நீக்கி இன்று தம்பு தெரு என்று பல் இளிக்கிறது.

இதைப் படிப்பவர்களில் ஒருவர்: சும்மா.. நீங்க பாட்டுக்கு கதை விடாதீங்க…

டி என் கே: ஆதாரம் – கம்பன் நேற்று இன்று நாளை By சிகி சிவம்.
இ ப ஒ: அய்யய்யோ…. அப்பொ அடுத்த பாரா கம்ப ராமாயணம்
தானா???

சங்ககாலம்:

நிலம், இடம் இதுக்கே இவ்வளவு சண்டை பிடிக்கும் இந்தக் காலத்தில்.. ஆட்சியையே அப்படியே தூக்கிக் கொடுக்க… அதையும் வாங்காமெ… இல்லை..நீயே வச்சிக்க.. எனக்கு வேண்டாம் என்று சொல்வது சொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்.

கம்பராமாயணத்தில்

“அரசு நின்னதே ஆள்க” இது இராமன் பரதனைப் பாத்து சொன்னது.

“சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னன் ஆதி; என்சொல்லை மறாது என்றான்”

இது பரதன் சத்ருகனிடம் சொன்னது. நீ அரசை  வசிக்கப்பான்னு.

“யானாம் இவ்வரசை ஆள்வேன்”

இந்தக் கதை இங்கே வேண்டாம் பரதண்ணா… என்னை ஆளைவிடு என்று அவரும் கலண்டுக்கிறார்.

சகோதரபாசம் இப்படி இருக்கனும் என்று கம்பன் எதிர் பாக்கிறார்.

சரி.. இதெல்லாம் இப்பொ சாத்தியமா??

One thought on “பாகப் பிரிவினை

  1. எனக்கும் தம்பு செட்டித தெருவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    அங்கிருந்த முத்தையாலுப்பேட்டை மேனிலைப்பள்ளியில் தான்
    +2 படித்தேன். அந்தத் தெருவில் இருக்கும் காளி காம்பாள் கோயில் எனக்கு
    அமைதியை அளித்த இடங்களில் ஒன்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s