சமீபத்திய ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்திருக்கும் பாடல் ஒன்று. ஏதாவது ஒரு சேனலில் தினமும் கேட்க முடிகிறது அந்தப் பாடலை. ஈசன் படத்தில் வருதாம். டன் டனக்கா டன் டனக்கா என்ற கிராமிய மெட்டில் வரும் குத்துப்பாடல் அது.
ஈசன் படைப்பில் எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு…. தூத்துக்குடி காரியின் என் கதை கேளுங்க என்று சொல்லும் சோகம்… குத்தாட்டத்தை மீறி கண்ணீரை வரவலைக்கும் ஒரு விலைமகளின் கதை அது..
முதல் முறை கேட்டவுடன் அந்த துள்ளிசை பிடித்தது. கும்பலாய் ஆடும் ஆட்டமும் நன்றாய் இருந்தது. அதில் ஒரு கட்டத்தில் அனைவருமே நிக்கும் ஒரு காட்சி வரும். நானும் அங்கே தான் நின்னேன்…. உத்துக்கேட்டா அந்த நெஞ்சை அறுக்கும் வார்த்தைகள். ஒரு ஜான் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்.
ஈசனே… என்னப்பா இது படைப்பு???
கொளப்புறியே ஈசனே… இப்படியும் இருப்பாங்களான்னு சந்தேகத்தோட.. ( கம்பராமாயணம் சொல்லப் போறேன்னு பாக்கிறீங்க…??) அதான் இல்லை… இந்த முறை நாலடியார் கிட்டெ போயி விளக்கம் கேட்டேன். அவரு ஒரு கதை சொல்றாரு…
உலகிலேயே விஸ்தாரமான இடம்.. அதுவும் அழகான இடம் (நம்ம காமன் வெல்த் அரங்கம் அல்லது டி 3 டெர்மினல் மாதிரி) இதுக்கெல்லாம் ஓனர் ஒருத்தர்.
தேவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா அந்த ஒரு ஆளுக்கு சலாம் வைக்கிறாங்க.
அவரோட கண்ணு எப்புடி கீது தெரியுமா??? தாமரை மாதீரி சிகெப்பா கீதாம்.
அவரும் ஒரு நாள் பலான ஆள் கிட்டெ போய்… “ஃபிரீ ஆஃப்பர் ஏதும் இல்லியா?” -ன்னாராம்.
அதுக்கு அந்த (இளம் தளிர் மாதிரி இருந்த) பலான பார்ட்டி சொல்லிச்சாம்: இந்தா வணக்கம் வாங்கிக்க.. ஓடிப்போயிடுன்னு..
சமணர்கள் எழுதிய நாலடியில் சொல்லும் அந்த “அவர்” யார் தெரியுமா?
திருமால். (சந்திலெ சிந்து பாடும் சாக்கில் திருமாலை கொஞ்சம் போட்டுக் கொடுக்கிறாங்க… இலக்கியத்தில் இதெல்லாம் சகஜமப்பா…)
திருமாலே ஆனாலும் “காசு இருந்தா வா… இல்லாட்டி நடையை கட்டு”- ன்னு அவங்க சொல்லுவாங்கன்னு, இவங்க சொல்ல, நான் உங்களுக்கு சொல்றேன்.. (என்ன நான் சரியாத்தான் சொல்றேனா???)
பலான பார்டடிக்கு பட்டுப் பாவாடை எதுக்கு? அவங்க பாட்டுக்கு அப்படி பாட்டு பாடிட்டு போறாங்க.. நம்ம பாட்டை நாம பாப்போம்..
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன், –
தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக்
கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையார் றொழுது.
அடுத்த பாட்டில் சந்திப்போம்…
T N Krishnamoorthi