கட்டிப்புடி கட்டிப்புடிடா..


இதைப் படித்தவுடன் நமீதா ஞாபகம் வந்தா… அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. எனக்கு, முன்னாபாய் MBBS & ஆல்வார்பேட்டை ஆளுடா (பரமக்குடியான் தான்) பாட்டு தான் ஞாபகம் வரும். ரெண்டு படத்திலும் அந்த கட்டிப்புடி வைத்யம் இருக்கும். கட்டிப் பிடித்தால் நோய் போகுமா??

நோய் போகுதோ இல்லையோ ஒரு இதம் கிடைக்கும்.

அதனால் தானோ என்னவோ, தழுவிடும் பொழுதினில் இடம் மாறும் இதயமே.. என்று ஒரு கவிஞன் பாடிவைத்தான்.

காற்று வெளியிடை கண்ணம்மா என்றான் பாரதி.. காற்று புக இடைவெளி இன்றி தழுவதல் பற்றி வள்ளுவர் வரிஞ்சி கட்டி எழுதுறார்.

அது சரி..இப்போ எதுக்கு இதை எழுதுறீங்க??

நீங்க கேக்கறீங்கன்னு இப்பவே கம்பர் பாட்டு உட முடியுமா என்ன?? அதுக்கு கொஞ்சம் அங்கிட்டி இங்கிட்டி சுத்தி வந்தாத் தான் மஜாவே. 

ரெண்டு பேரு ஜாலியா சண்டை போட்டு விளையாடுவது சமாதானமான ஒரு நிலை வரத்தானே!!! கரண்ட் இல்லாத நேரங்களில் நம்மூர் பசங்க விளையாடறதைப் பாத்திருக்கீங்களா?? Stone Paper Scisor (SPS) என்று படு ஜாலியா பஸ் ஸ்டாபில் விளையாடுவது நான் ஓரு நாள் உன்னிப்பா கவனிச்சதில் சிக்கியது. (வெறும் கையை வைத்து கிரிக்கெட் கூட ஆடுகிறார்கள் Odd Even என்று சொல்லி… எனக்கு அந்த கிரிக்கெட்டும், புரியலை…இதுவும் புரியலை). SPS ஒரு சூப்பர் விளையாட்டு. ரெண்டு பேரு ஆடும் ஆட்டம் அது. வேறு எந்த விளையாட்டு சாமான்களும் தேவையில்லை.

இருவரும் கையை வைத்து சாட் பூட் திரி அல்லது ஒண் டூ திரி என்றே சொல்லி ஒரே நேரத்தில் கையை காண்பிக்க வேண்டும். மூன்று முறையில் காண்பிக்கலாம்.

கை விரல்களை மூடி வைத்தல் – அது கல்

விரல்களை விரித்துக் காட்டுதல் – அது பேப்பர்

ரெண்டு விரல் மட்டும் காட்டினால் அது கத்தரி

இனி ரிசல்ட்டுக்கு வருவோம்:

 

இரண்டு கைகள் எப்படி வைக்கிறார்களோ அதன் படி பாயிண்ட் கிடைக்கும்:

கல் கல் : Draw (யாருக்கும் பாயிண்ட் இல்லை)

அது போல் பேப்பர் பேப்பர் & கத்தரி கத்தரி அதே கதி தான்.

கல் பேப்பர் – ஜெயிப்பது பேப்பர்

கல் கத்தரி – ஜெயிப்பது கல் 

ேப்பர் கத்தரி – ஜெயிப்பது கத்தரி.

ஒவ்வொரு ஜெயிப்பிற்கும் ஒரு பாயிண்ட் வைத்து 25 வரும் வரை விளையாடுவர். 25 முதலில் எடுத்தவர் வெற்றி.

ுகத்தில் நட்பு அதையும் மீறி வெல்ல வேண்டும் என்ற ஆவல்… எல்லாம் சேர்ந்த விளையாட்டு அது. கணவன் மனைவி கூட ஆடலாம். டென்ஷன் குறையும்.

 மறுபடியும் நமீதா ஏரியாவுக்கு போவலாம். விவேக் இன்கம் டேக்ஸ் அதிகாரியாய் வரும் படம் அது. மூங்கில் போல் நிமிர்ந்து நிற்கும் அவரை வளைந்து ஒரு முத்தம் கொடுத்து போவது போல் வரும் காட்சி அது. இப்போது அந்த முத்தக்காட்சி காட்டப்படுவதில்லை.

 சமாதானம் ஆகாத விஷயங்களைக்கூட பேசித் தீரத்துக் கொள்ளலாம் என்ற ஒரு நீதி தான் புரியுது நமக்கு.

 சமீபத்தில் Delhi High Court க்கு ஒரு அலுவல் தொடர்பாக போக வேண்டி வந்தது. சமீபத்தில் குண்டு வெடித்த அதே இடம். நீதியரசர் வழ்க்கு மன்றம் இதெல்லாம் படங்களில் பாத்து நேரில் பாக்கும் போது பிரமிப்பாத்தான் இருந்தது.

 உள்ளே உக்காந்ததும் “சமாதானமா போங்க” என்ற leaflet விநியோகம் செய்தனர். அட… அரசின் முயற்சியில் நீங்களே பேசி முடிக்கலாம் என்று சொல்கிறது அந்த பிரசுரம்.

 எனக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. வளைந்து கொடுக்கும் நாணல். மூங்கிலோ நிமிர்ந்து நிக்கும். மூங்கிலையே வளைக்கும் யுத்தி மாதிரி தெரியுதே…

 அப்படியே கம்பர் கிட்டே போனா… அவரும் மூங்கில் மாதிரி என்று சொல்கிறார் ஒரு இடத்தில்.

வாலி சுக்கிரீவனிடம் இரண்டாம் முறை போருக்கு போகும் சமயம். தாரை தடுக்கிறாள். எப்படியாம்?

வாலி கோபத்தில் கணல்.. அவ்வளவு சூடு.. வாயில் புகை. கண்களில் தீ தாரையில் கூந்தல் அப்படியே கருகுதாம்.. அமிழ்தம் போன்றவள் அவள்..மூங்கில் இயல்பு கொண்ட தாரை தடுத்தாள் என்கிறார் கம்பர்.

ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்

வாயிடைப் புகை வர வாலி கண் வரும்

தீயிடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.

 பேச்சுவார்த்தையில் தீராத பிரச்சினைகளே இல்லை…

பேசுங்க..பேசுங்க.. பேசி தீருங்க பிரச்சினையை… நாணல் குணம் உள்ளவர்களும் சரி, மூங்கில் குணம் உள்ளவர்களுக்கும் அதே யோசனை தான்.

இன்னும் வ(ள)ரும்.

6 thoughts on “கட்டிப்புடி கட்டிப்புடிடா..

    • Tamil Nenjan says:

      புதிய முயற்சியாய் வலைப்பூ தொடங்கியுள்ளேன். வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  1. மூங்கிலை தண்ணியிலெ ஊறப்போட்டா கொஞ்சம் வளையுமோ?

    • Tamil Nenjan says:

      மூங்கிலும் வளைஞ்சி கொடுக்கனும் என்பது தான் கம்பன் சார்பில் நான் அறிந்து கொண்டது. ஊறல் கொடுத்து வளைத்தலும் ஒரு வகை தான்.

  2. இதற்கு முந்தைய பாடலில் ‘கடலில் தான் கடை ஆலமும் ஒத்தான்’ என்று வரும்.அதனை இங்கு சேர்த்துப் படித்தால் ஆலத்திற்குப் பிறகு கிடைத்த அமுதம் போன்றவள் தாரை என்ற பொருள் நயம் கொள்ள முடியும்.
    வாலிக்கு ஆலமும் தாரைக்கு அமுதமும் உவமையாவது நயம்.
    ‘கூந்தல் தீகின்றாL ‘என்ற தொடரால் தாரைக்குப் பின்னர் வர இருக்கும் அமங்கல நிலை முன்னரே சுட்டப்படுகிறது என்றும் கொள்ளலாம்.
    இள மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமையாக பயன்படுத்துவது தமிழில் மரபு.
    கோளறு பதிகத்தில் ‘வேயுறு தோளி பங்கன்’ என்று சம்பந்தர் பாடியது நினைவில் இருக்கம்.

    • Tamil Nenjan says:

      வலைப்பூவில் வருகை தந்தமைக்கு நன்றி பிரபா…வரும் அமங்கலத்தை முன்னரே காட்டும் வகையில் யோசத்தது இன்னும் அருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s